IND vs SA : பும்ராவுக்கு பதில் நான்தான் சரியானவன் – புதிய வரலாற்று சாதனை படைத்து நிரூப்பிக்கும் தீபக் சஹர்

Deepak Chahar IND
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை சுவைத்த இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலைமையில் இந்தூரில் செப்டம்பர் 4ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பிரதாய கடைசி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் அதிரடியாக 227/3 ரன்கள் சேர்த்தது. கேப்டன் பவுமா 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக் 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 68 (43) ரன்களில் அவுட்டானார்.

அடுத்து களமிறங்கிய திரிஷன் ஸ்டப்ஸ் தனது பங்கிற்கு 23 (18) ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் ஓயாத ரீலி ரோசவ் கடைசி வரை அவுட்டாகாமல் 7 பவுண்டரி 8 சிக்சருடன் சதமடித்து 100* (48) ரன்களும் டேவிட் மில்லர் 3 சிக்ஸருடன் 19* (5) ரன்களும் குவித்தனர். அதை தொடர்ந்து 228 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 1 ரன்னில் நடையை கட்டினார்.

- Advertisement -

சொதப்பிய இந்தியா:
அடுத்த சில ஓவர்களில் தொடக்க வீரராக களமிறங்கிய அதிரடி காட்ட முயன்ற ரிஷப் பண்ட் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 27 (15) ரன்களில் ஆட்டமிழக்க அவருடன் அதிரடியாக பேட்டிங் செய்த தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 46 (21) ரன்களில் அவுட்டானார். அந்த சமயத்தில் சூர்யகுமார் யாதவும் 8 (6) ரன்களில் அவுட்டானதை போல் எஞ்சிய பேட்ஸ்மேன்களும் தென் ஆப்பிரிக்காவின் தரமான பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதனால் 19.3 ஓவரிலேயே 178 ரன்களுக்கு சுருண்ட இந்தியா 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

அந்தளவுக்கு அற்புதமாக பந்து வீசி ஆறுதல் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக பிரிடோரியஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இருப்பினும் 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்ற இந்தியா வரலாற்றில் சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் முறையாக டி20 தொடரை வென்று சாதனை படைத்தது. இப்போட்டியில் தினேஷ் கார்த்திக் தவிர ஏனைய இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த தவறிய நிலையில் கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய தீபக் சஹர் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 31 (17) ரன்கள் எடுத்து போராடி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

போராடிய சஹர்:
அதிலும் அக்சர் படேல் அவுட்டான முதல் விக்கெட் விழுவதை பற்றி கவலைப்படாமல் அதிரடி காட்டிய அவர் ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்திருந்தார். அதனால் டாப் ஆர்டரில் ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் இன்னுமொரு 40 ரன்கள் எடுத்திருந்தால் நிச்சயம் இந்தியா வெற்றி பெற்றிருக்கும். இருப்பினும் இப்போட்டியில் ரசிகர்களின் மனம் கவரும் வகையில் 3 சிக்சர்களை பறக்கவிட்ட அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 9வது இடத்தில் களமிறங்கி 3 சிக்சர்களை அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் இர்பான் பதான் மற்றும் ஆசிஷ் நெக்ரா ஆகியோர் மட்டும் அதிகபட்சமாக தலா 2 சிக்சர்கள் அடித்திருந்தனர்.

மேலும் டி20 கிரிக்கெட்டில் 9வது இடத்தில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த 2வது இந்திய பேட்ஸ்மேன் என்ற அஷ்வின் சாதனையையும் அவர் சமன் செய்தார். அந்தப் பட்டியல்:
1. இர்பான் பதான் : 33*, இலங்கைக்கு எதிராக
2. ரவிச்சந்திரன் அஷ்வின் : 31*, இலங்கைக்கு எதிராக
3. தீபக் சஹர் : 31, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக

- Advertisement -

முன்னதாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பவுலர், சிறந்த பவுலிங்கை பதிவு செய்த இந்திய பவுலர் ஆகிய சாதனைகளைப் படைத்து உலக கோப்பையில் விளையாடும் முதன்மை பவுலராக காத்திருந்த அவர் ஐபிஎல் தொடரின் போது காயமடைந்தார். அதனால் 2 மாதங்கள் விலகியிருந்து மீண்டும் திரும்பிய போது ஹர்ஷல் படேல் போன்ற பவுலர்கள் அவருடைய இடத்தை ஆக்கிரமித்து விட்டனர். அதன் காரணமாக உலக கோப்பையில் விளையாட மீண்டும் முதலிலிருந்து போராட துவங்கிய அவருக்கு ஸ்டேண்ட் பை லிஸ்டில் மட்டுமே இடம் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க : சோதனையில் பாஸான தினேஷ் கார்த்திக் – வயதை நம்பராக்கி மீண்டும் அசத்தல் சாதனை, வீடியோ உள்ளே

அந்த நிலைமையில் பும்ரா காயமடைந்ததால் இத்தொடரில் விளையாடிய அவர் முதல் 2 போட்டிகளில் பந்து வீச்சில் அபாரமாகவும் நேற்றைய போட்டியில் பேட்டிங்கில் அசத்தலாகவும் செயல்பட்டார். இதனால் பும்ராவை விட பேட்டிங்கிலும் அசத்தும் திறமையும் பந்து வீச்சில் கிட்டத்தட்ட அவரைப் போலவே அனைத்து சூழ்நிலைகளிலும் அசத்தும் திறமையும் பெற்றுள்ள தாம் உலக கோப்பையில் விளையாட தகுதியானவன் என்பதை மீண்டும் ஒருமுறை தீபக் சஹர் நிரூபித்துள்ளார்.

Advertisement