சோதனையில் பாஸான தினேஷ் கார்த்திக் – வயதை நம்பராக்கி மீண்டும் அசத்தல் சாதனை, வீடியோ உள்ளே

DInesh Karthik
- Advertisement -

அக்டோபர் 4ஆம் தேதியான நேற்று இந்தூரில் நடைபெற்ற 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் அதிரடியாக 227/3 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு கேப்டன் பவுமா 3 ரன்னில் அவுட்டானாலும் 2வது விக்கெட்டுக்கு ரிலீ ரோசவ் உடன் இணைந்து 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய தொடக்க வீரர் குயின்டன் டி காக் 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 68 (43) ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய திரிஷன் ஸ்டப்ஸ் தனது பங்கிற்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 23 (18) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் இந்திய பவுலர்களை பந்தாடிய ரோசவ் 7 பவுண்டரி 8 சிக்சருடன் 100* (48) ரன்கள் குவித்தார்.

கடைசியில் களமிறங்கிய மில்லர் தனது பங்கிற்கு 3 சிக்சருடன் 19* (5) ரன்களை குவித்து பினிஷிங் கொடுத்தார். அதனால் 238 என்ற பெரிய இலக்கை துரத்திய இந்தியாவுக்கு முதல் ஓவரிலேயே கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டாக அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 1 ரன்னில் நடையை கட்டினார். அப்போது ஆச்சரியப்படும் வகையில் தொடக்க வீரராக களமிறங்கிய அதிரடி காட்ட முயன்ற ரிஷப் பண்ட் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 27 (14) ரன்களில் அவுட்டாக 4வது இடத்தில் களமிறங்கி வெளுத்து வாங்கிய தினேஷ் கார்த்திக் 46 (21) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

ஆறுதல் வெற்றி:
அந்த சமயத்தில் வந்த சூர்யகுமார் யாதவ் 8 (6) ரன்களில் அவுட்டானதால் கடைசியில் தீபக் சஹர் 31 (17) ரன்கள் உமேஷ் யாதவ் 20* (17) ரன்கள் எடுத்து போராடிய போதிலும் 18.3 ஓவரில் இந்தியா 178 ரன்களுக்கு சுருண்டது. அந்தளவுக்கு திறமையாக பந்து வீசி 49 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்காவின் சார்பில் அதிகபட்சமாக பிரிடோரியஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். ஏனெனில் 3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் ஏற்கனவே வென்று கோப்பையை கைப்பற்றிய இந்தியா வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்று சாதனை படைத்தது.

அப்படி ஏற்கனவே தொடரை கைப்பற்றியதன் காரணமாகவே இந்த சம்பிரதாய போட்டியில் ராகுல், விராட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு ரிஷப் பண்ட் தொடக்க வீரராகவும் சூரியகுமாரை 5வது இடத்திலும் களமிறக்கி கேப்டன் ரோகித் சர்மா சோதனை செய்தார். அதில் எதுவுமே பலனளிக்காத நிலையில் 4வது இடத்தில் களமிறக்கப்பட்ட தினேஷ் கார்த்திக் மட்டும் கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் அதிகபட்சமாக 46 (21) ரன்களை 219.05 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அசத்தினார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக அவதரித்த அவருடைய இந்திய கேரியர் முடிந்து விட்டதாக அனைவரும் நினைத்த வேளையில் தம்மால் டி20 உலக கோப்பையில் விளையாடி கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் கடினமாக உழைத்த தினேஷ் கார்த்திக் ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணிக்காக அபாரமாக செயல்பட்டு 3 வருடங்கள் கழித்து இந்திய அணியில் கம்பேக் கொடுத்தார். அதில் பெரும்பாலும் டெத் ஓவர்களில் களமிறங்கி பினிஷிங் செய்பவராக கிடைத்த வாய்ப்புகளில் அசத்திய போதிலும் பாண்டியா, சூரியகுமார் ஆகியோரும் பினிஷிங் செய்வார்கள் என்பதால் அந்த வேலைக்காக மட்டும் அவரை தேர்வு செய்யக்கூடாது என்று ஸ்ரீகாந்த், கம்பீர் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

அத்துடன் அவரை முழுமையாக நம்பாத கேப்டன் ரோகித் சர்மாவும் ஆசிய கோப்பையில் கழற்றி விட்டு தோல்வியை வாங்கிக் கட்டிக்கொண்டார். அதே நிலைமை ஆஸ்திரேலிய தொடரிலும் நீடித்த நிலையில் உலகக் கோப்பைக்கு முன்பாக தினேஷ் கார்த்திக்கு தேவையான முழுமையான வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்த ரோஹித் சர்மா அந்த வாக்கை காப்பாற்றும் வகையில் நேற்றைய போட்டியில் 2வது ஓவரிலேயே 4வது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பை கொடுத்தார்.

- Advertisement -

அதில் அனைத்து இடங்களிலும் அசத்துவேன் என்று நிரூபித்த தினேஷ் கார்த்திக் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 37 வயதுக்குப்பின் அதிக முறை 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை (குறைந்தது 30+ ரன்கள் எடுத்த இன்னிங்ஸ்கள்) குவித்த பேட்ஸ்மேன் என்ற ஜெயசூர்யாவின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. தினேஷ் கார்த்திக் : 3
2. சனாத் ஜெயசூரியா : 2

இதையும் படிங்க : கேப்டனாக அபார உலகசாதனை படைத்தும் பேட்டிங்கில் மோசமான உலக சாதனை படைத்த ரோஹித் – பட்டியல் இதோ

முன்னதாக ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 37 வயதுக்குப்பின் அதிக ரன்கள் மற்றும் 2 ஆட்டநாயகன் விருதை வென்ற ஒரே இந்திய பேட்ஸ்மேனாகவும் தினேஷ் கார்த்திக் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement