கேப்டனாக அபார உலகசாதனை படைத்தும் பேட்டிங்கில் மோசமான உலக சாதனை படைத்த ரோஹித் – பட்டியல் இதோ

Rohit Sharma
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலையில் இந்தூரில் அக்டோபர் 4ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பிரதாய கடைசி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 227/3 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு கேப்டன் பவுமா 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் 2வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டிய குயின்டன் டீ காக் 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 68 (43) ரன்களில் அவுட்டானார்.

Rilee Rossow 2

- Advertisement -

இடையே ட்ரிஷன் ஸ்டப்ஸ் 23 (18) ரன்களில் அவுட்டானாலும் அவருடன் மீண்டும் 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து களமிறங்கியது முதலே பந்தாடிய ரிலீ ரோசவ் 7 பவுண்டரி 8 சிக்சருடன் அதிரடியாக 100* (48) ரன்கள் சதமடிக்க இறுதியில் டேவிட் மில்லர் 3 சிக்சருடன் 19* (5) ரன்கள் குவித்து பினிசிங் கொடுத்தார். அதை தொடர்ந்து 228 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 1 ரன்னில் ஏமாற்றினார்.

சொதப்பிய இந்தியா:
அந்த சமயத்தில் ஆச்சரியப்படும் வகையில் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடி காட்ட முயன்ற ரிஷப் பண்ட் 27 (14) ரன்களிலும் 4வது இடத்தில் களமிறங்கி கிடைத்த வாய்ப்பில் பொன்னாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 46 (21) ரன்களில் அவுட்டானார்கள். அப்போது களமிறங்கிய சூரியகுமார் 8 (6) ரன்களில் அவுட்டானதை போல எஞ்சிய பேட்ஸ்மேன்களும் தென் ஆப்பிரிக்காவின் திறமையான பந்து வீச்சில் பெரிய ரன்களை எடுக்கத் தவறியதால் 18.3 ஓவரில் இந்தியா 178 ரன்களுக்கு சுருண்டது.

India

தென்ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக பிரிடோரியஸ் 3 எடுத்தார். அதனால் 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அந்த அணி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்து. மறுபுறம் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் சொதப்பினாலும் சொந்த மண்ணில் முதல் முறையாக 2 – 1 (3) என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு டி20 தொடரை வென்று இந்தியா நிம்மதியடைந்தது. அதனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் பங்கேற்க வெற்றியுடன் சென்றாலும் பந்து வீச்சில் இன்னும் முன்னேறாமலேயே இந்தியா புறப்படுகிறது.

- Advertisement -

ரோஹித் பரிதாபங்கள்:
1. அதேபோலவே இத்தொடரின் கோப்பை வென்ற ரோகித் சர்மா சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற சாதனை படைத்தார். அத்துடன் அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்ற இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் (10) சாதனையை முறியடித்து புதிய சாதனை (11) படைத்தார்.

Rohit Sharma IND vs SA

2. அதைவிட சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் குறைந்த போட்டிகளில் 50 வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையும் உடைத்து புதிய உலகசாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 62*
2. ரிக்கி பாண்டிங் : 63
3. சர்பிராஸ் அஹமத் : 68
4. விராட் கோலி : 70

- Advertisement -

ஆனால் 228 ரன்களை துரத்தும்போது அதிரடியான தொடக்கத்தை கொடுக்க வேண்டிய அவர் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஏனெனில் கடைசியில் தீபக் சஹர் 31 (17), உமேஷ் யாதவ் 20* (17) ரன்கள் எடுத்து போராடியதற்கு ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அவர் 30 – 40 எடுத்திருந்தாலே இந்தியா இப்போட்டியில் எளிதாக வென்றிருக்கும். இருப்பினும் அது நடக்காத நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியிலும் அவர் டக் அவுட்டாகியிருந்தார்.
1. அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு தொடரில் 2 முறை டக் அவுட்டான முதல் இந்திய கேப்டன் என்ற மோசமான வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார்.

Rohit Sharma IND vs AUS

2. அதைவிட சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட்டான இந்திய கேப்டன் என்ற விராட் கோலியை முந்தி மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 4*
2. விராட் கோலி : 3
3. ஷிகர் தவான் : 1

- Advertisement -

3. அதுபோக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 10 டக் அவுட்டான முதல் இந்திய வீரர் என்ற பரிதாப சாதனையையும் அவர் படைத்தார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 10*
2. விராட் கோலி : 5
3. கேஎல் ராகுல் : 4

இதையும் படிங்க : முதல்ல பேட்டிங் சரியில்ல. அப்புறம் பவுலிங் சரியில்ல. ஆனா இப்போ – வெற்றி குறித்து தெம்பா பவுமா மகிழ்ச்சி

4. அதைவிட சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்த பேட்ஸ்மேன் என்ற மோசமான உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 43*
2. கெவின் ஓப்ராய்ன் : 42
3. முஷ்பிகர் ரஹீம் : 40

Advertisement