SA vs SL : 3 வீரர்கள் சதம்.. இலங்கையை அடித்து நொறுக்கி துவம்சம் செய்த தெ.ஆ.. ஆஸியை மிஞ்சி புதிய உலக சாதனை

RSA vs SL
- Advertisement -

ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 7ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 4வது லீக் போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதின. மதியம் 2 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் பவுமா 8 (5) ரன்களில் அவுட்டாகி சென்றார்.

ஆனால் அடுத்ததாக வந்த வேன் டெர் டுஷன் மற்றொரு துவக்க வீரர் குயிண்டன் டீ காக் ஆகியோர் ஜோடி சேர்ந்து இலங்கை பவுலர்களை வெளுத்து வாங்கினார்கள். குறிப்பாக பவர் பிளே ஓவர்களிலேயே ஜோடி சேர்ந்த இவர்களில் டீ காக் தமக்கே உரித்தான அதிரடியான ஸ்டைலில் விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார். நேரம் செல்ல செல்ல 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அவுட்டாகாமல் அடம் பிடித்த இந்த ஜோடி மிடில் ஓவர்களிலும் வேகத்தை குறைக்காமல் வெளுத்து வாங்கியது.

- Advertisement -

நொறுக்கிய தென்னாப்பிரிக்கா:
அதில் முதலாவதாக சதத்தை தொட்ட டீ காக் 31 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று இலங்கை பவுலர்களை அடித்து நொறுக்கி 12 பவுண்டரி 3 சிக்சருடன் 100 (84) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களிலேயே அவருடன் மறுபுறம் தம்முடைய பங்கிற்கு சிறப்பாக விளையாடி 2வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய டுஷன் 13 பவுண்டரி 2 சிக்சருடன் 108 (110) ரன்கள் விளாசி அவுட்டானார்.

அந்த நிலைமையில் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஐடென் மார்க்கம் மற்றும் ஹென்றிச் க்ளாஸென் ஆகியோர் மீண்டும் சுமாராக பந்து வீசிய இலங்கை பவுலர்களை வெளுத்து வாங்கி 300 ரன்கள் தாண்டுவதற்கு உதவினார்கள். அதில் க்ளாஸென் 32 (20) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் பட்டையை கிளப்பிய ஐடன் மார்க்கம் இலங்கை பவுலர்களுக்கு கருணை காட்டாமல் சரவெடியாக விளையாடி வெறும் 49 பந்துகளில் 100 ரன்கள் தொட்டார்.

- Advertisement -

தொடர்ந்து இலங்கை பவுலர்களை அட்டகாசமாக எதிர்கொண்டு விளையாடிய அவர் 14 பவுண்டரி 3 சிக்சருடன் 106 (54) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் டேவிட் மில்லர் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக 3 பவுண்டரி 2 சிக்சருடன் 39* (21) ரன்கள் மார்கோ யான்சென் 12* (7) ரன்கள் எடுத்து ஃபினிஷிங் செய்தனர்.

இதையும் படிங்க: AFG vs BAN : அவங்க என்மேல் வச்சிருக்க நம்பிக்கை தான். என்னோட சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் – மெஹதி ஹாசன் பேட்டி

அதனால் 50 ஓவர்களில் 428/5 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மாபெரும் உலக சாதனை படைத்தது. இதற்கு முன் 2015 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பெர்த் நகரில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா 417/6 ரன்கள் குவித்ததே முந்தைய உலக சாதனையாகும். அந்தளவுக்கு பந்து வீச்சில் சொதப்பிய இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

Advertisement