AFG vs BAN : அவங்க என்மேல் வச்சிருக்க நம்பிக்கை தான். என்னோட சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் – மெஹதி ஹாசன் பேட்டி

Mehidy-Hasan-Miraz
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் பங்கேற்ற பங்களாதேஷ் அணியானது ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியுடன் இந்த உலகக் கோப்பை பயணத்தை துவங்கியுள்ளது. அந்த வகையில் இன்று தர்மசாலாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான அணியானது வங்கதேச அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களில் சுருண்டது. வங்கதேச அணி சார்பாக ஷாகிப் அல் ஹசன் மற்றும் மெஹிதி ஹசன் தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது 34.4 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 158 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வங்கதேச அணி சார்பாக மெஹிதி ஹசன் மற்றும் நஜ்முல் ஷாண்டோ ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

இந்த போட்டியில் பந்துவீச்சில் 9 ஓவர்களை வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்திய மெஹதி ஹசன் மிராஸ் பேட்டிங்கிலும் 73 பந்துகளில் 57 ரன்களை அடித்து அசத்தினார். இப்படி பேட்டிங் மற்றும் பவுலிங் என் இரண்டிலும் அற்புதமாக செயல்பட்ட அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய மெஹதி ஹசன் கூறுகையில் :

- Advertisement -

இந்த ஆட்டம் மிகச் சிறப்பான ஒன்று. நான் இப்படி சிறப்பாக விளையாடுவதற்கு பின்னால் ஏகப்பட்ட கடினமான உழைப்பு இருக்கிறது. அதோடு எனது அணியின் நிர்வாகத்திற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் என்னை சிறப்பாக செயல்பட வைக்கிறது. அதே போன்று எங்களது அணியின் கேப்டன் என்னை சரியான ஏரியாவில் பந்துவீச சொல்வதால் விக்கெட்டுகளும் கிடைக்கின்றன.

இதையும் படிங்க : AFG vs BAN : எங்ககிட்ட 3-4 பேர் நறுக்குன்னு இருக்காங்க. வெற்றிக்கு பின்னர் – ஷாகிப் அல் ஹசன் பேட்டி

இன்றைய போட்டியின் ஒவ்வொரு பந்தையும் நான் மிக கவனமாக எதிர்கொண்டேன். குறிப்பாக இது போன்ற மைதானத்தில் டர்ன் இருக்கும் மைதானத்தில் ஸ்ட்ரைட்டாக விளையாட முயற்சித்தேன். எப்பொழுதுமே எட்டாவது வரிசையில் பேட்டிங் செய்து கொண்டிருந்த நான் தற்போது கடந்த சில போட்டிகளாகவே டாப் ஆர்டரில் களமிறக்கப்ட்டு வருகிறேன். இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என மெஹதி ஹாசன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement