2018க்குப்பின் நின்ற ஹாட்ரிக் தோல்விகள்.. பிங்க் ஜெர்ஸியுடன் வந்த தெ.ஆ அணிக்கு பரிதாபத்தை கொடுத்த இந்தியா

IND vs RSA PINK ODI
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 கிரிக்கெட் தொடரில் 1 – 1 (3) என்ற கணக்கில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி சமன் செய்தது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டிகளிலும் தென்னாப்பிரிக்காவை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

ஜோஹன்ஸ்பர்க் நகரில் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 116 ரன்ககளுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஆண்டிலோ பெலுக்வியோ 33 ரன்கள் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 5, ஆவேஸ் கான் 4 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

- Advertisement -

அசத்திய இந்தியா:
அதை தொடர்ந்து 117 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுக போட்டியிலேயே அசத்தலாக விளையாடி 55* ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களும் எடுத்து எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். முன்னதாக இந்த போட்டியில் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தென்னாப்பிரிக்க வழக்கமான பச்சை நிறத்துக்கு பதிலாக இளஞ்சிவப்பு நிற ஜெர்ஸியை அணிந்து விளையாடினார்கள்.

பொதுவாக இது போன்ற ஜெர்சியை அணிந்து விளையாடும் போது 2015இல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஏபி டீ வில்லியர்ஸ் அதிவேகமாக அரை சதம் மற்றும் சதமடித்தது உட்பட தென்னாப்பிரிக்கா அதிரடியாக விளையாடி பெரிய வெற்றிகளை பெறுவது வழக்கமாகும். சொல்லப்போனால் பிங்க் நிற ஜெர்சியில் அந்த அணி 11 போட்டிகளில் 9 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் மட்டுமே சந்தித்ததால் இப்போட்டியில் இந்தியாவை அடித்து நொறுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் முதல் ஓவரிலிருந்தே அனலாக பந்து வீசிய அர்ஷிதீப், ஆவேஷ் கான் ஆகியோருக்கு ஈடு கொடுக்க முடியாத தென்னாபிரிக்கா 116 ரன்களுக்கு சுருண்டு தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஒருநாள் ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது. அதனால் 2020க்குப்பின் முதல் முறையாகவும் வரலாற்றில் 3வது முறையாகவும் பிங்க் நிற ஜெர்சியை அணிந்து விளையாடிய போட்டியில் தென்னாப்பிரிக்கா பரிதாபமான தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க: 400வது ஸ்பெஷல் கேப்.. 2016க்குப்பின் அறிமுக போட்டியிலேயே சாய் சுதர்சன் படைத்த தனித்துவ சாதனை

மறுபுறம் 2018க்குப்பின் முதல் முறையாக தென்னாபிரிக்க மண்ணில் ஒரு ஒருநாள் போட்டியில் இந்தியா வென்று அசத்தியுள்ளது. குறிப்பாக 2022இல் இதே ராகுல் தலைமையில் விளையாடிய இந்தியா 3 – 0 (3) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வியை சந்தித்தது. தற்போது தென்னாபிரிக்க மண்ணில் அந்த ஹாட்ரிக் தோல்விகளை நிறுத்தியுள்ள இந்தியா முதல் முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement