400வது ஸ்பெஷல் கேப்.. 2016க்குப்பின் அறிமுக போட்டியிலேயே சாய் சுதர்சன் படைத்த தனித்துவ சாதனை

Sai sudharsan 3
- Advertisement -

தென்னாபிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் டிசம்பர் 17ஆம் தேதி மோதிய முதல் ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். ஜோஹன்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்தங்கியது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஆண்டிலோ பெலுக்வியோ 33 ரன்கள் எடுக்க பந்து வீச்சில் அனலாக செயல்பட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 5, ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 117 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ருதுராஜ் 5 ரன்னில் அவுட்டானலும் சாய் சுதர்சன் தம்முடைய கேரியரின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அமர்க்களமான துவக்கத்தை பெற்றார்.

- Advertisement -

சுதர்சனின் சாதனை:
அந்த நிலைமையில் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தம்முடைய கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி 52 ரன்கள் விளாசி அவுட்டானார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி கடைசி வரை அவுட்டாகாத சுதர்சன் 9 பவுண்டரியுடன் 55* ரன்கள் குவித்து 16.4 இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினர். அதனால் 2018க்குப்பின் முதல் முறையாக தென்னாபிரிக்க மண்ணில் வென்ற இந்தியா என்ற 1 – 0* (3) கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக டிஎன்பிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடி 2023 ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிரான ஃபைனலில் 96 விளாசி சச்சின் போன்ற ஜாம்பவான்களின் பாராட்டைப் பெற்ற சாய் சுதர்சன் இந்தியா ஏ அணிக்காக அறிமுகமாகி பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து அசத்தினார். அதன் காரணமாக இத்தொடரில் முதல் முறையாக இந்தியாவுக்கு விளையாட தேர்வான அவர் முதல் போட்டியிலேயே அதிர்ஷ்டமாக விளையாடும் 11 பேர் அணியிலும் வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

இதன் வாயிலாக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக விளையாடிய 400வது வீரர் என்ற ஸ்பெஷலான தனித்துவ சாதனையை சுதர்சன் படைத்துள்ளார். இதற்கு முன் 1961இல் பாலோ குப்தே 100வது வீரராகவும், 1990இல் குர்சன் சிங் 200 வது வீரராகவும், 2008இல் மன்ப்ரீத் கோனி 300வது வீரராகவும் அறிமுகமான நிலையில் தற்போது சுதர்சன் 400வது வீரராக இந்தியாவுக்கு அறிமுகமாகியுள்ளார்.

இதையும் படிங்க: நான் போட்ட பிளேன் வேற.. ஆனா இங்க நடந்தது வேற.. தெ.ஆ அணியை வீழ்த்திய பின்னர் – கே.எல் ராகுல் மாஸ் பேட்டி

அதில் 55* ரன்கள் அடித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டின் அறிமுக போட்டியிலேயே அரை சதமடித்த 17வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் அறிமுகப் போட்டியிலேயே அரை சதமடித்த 4வது இந்திய துவக்க வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ராபின் உத்தப்பா : 86, இங்கிலாந்துக்கு எதிராக, 2006
2. கேஎல் ராகுல் : 100*, ஜிம்பாப்பேவுக்கு எதிராக, 2016
3. பைஸ் பசல் : 55*, ஜிம்பாப்பேவுக்கு எதிராக, 2016
4. சாய் சுதர்சன் : 55*, தென்னாப்பிரிக்காவுக்கு, 2023*

Advertisement