நான் போட்ட பிளேன் வேற.. ஆனா இங்க நடந்தது வேற.. தெ.ஆ அணியை வீழ்த்திய பின்னர் – கே.எல் ராகுல் மாஸ் பேட்டி

KL-Rahul
- Advertisement -

கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது இன்று டிசம்பர் 17-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் தங்களது அணி முதலில் பேட்டி செய்யும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி 27.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். பின்னர் 117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 117 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் தமிழக வீரரான சாய் சுதர்ஷன் 55 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கூறுகையில் : இந்த போட்டியில் வெற்றி பெற்றது உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

நாங்கள் இந்த போட்டியில் நினைத்தது வேறு.. ஆனால் இங்கு நடந்தது முற்றிலும் வேறு.. இந்த போட்டியில் நாங்கள் ஸ்பின்னர்களை ஆட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் போட்டியின் ஆரம்பத்திலேயே வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் கட்டுக்கோப்புடன் பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த முதலாவது போட்டியில் எங்களது அணியின் பந்துவீச்சாளர்களின் செயல்பாடு மிக பிரமாதமாக இருந்தது. அவர்களது சிறப்பான பந்துவீச்சே இந்த வெற்றிக்கு காரணமாக நான் பார்க்கிறேன்.

இதையும் படிங்க : என்னால் 5 விக்கெட் எடுத்து கம்பேக் கொடுக்க முடியும்ன்னு நம்பிக்கை கொடுத்த அவருக்கு நன்றி.. அர்ஷ்தீப் பேட்டி

எல்லோருமே நாட்டிற்காக தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் நமது அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் தங்களது முழு பங்களிப்பை வழங்கி இருந்தனர். இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர் என கே.எல் ராகுல் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement