செமி ஃபைனலில் இந்தியாவுடன் மோத பாகிஸ்தான் வரனும்.. காரணம் அது தான்.. சௌரவ் கங்குலி ஓப்பன்டாக்

Sourav Ganguly
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதில் இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதி சுற்றின் 2வது போட்டியில் மோதுவதும் உறுதியாகியுள்ளது.

இந்த நிலைமையில் புள்ளி பட்டியலில் 4வது இடத்தை பிடித்து இந்தியாவுடன் மோதபபோகும் அணி யார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்த ஒரு இடத்தை பிடிப்பதற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகள் போட்டியிட்டு வருகின்றன. இதில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை விட அதிக ரன்ரேட் கொண்டிருப்பதன் காரணமாக நியூசிலாந்துக்கு சற்று அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

கங்குலியின் விருப்பம்:
குறிப்பாக தங்களுடைய கடைசி போட்டியில் இலங்கையை தோற்கடித்தால் இந்தியாவுடன் மோதுவதற்கு செமி ஃபைனலுக்கு தகுதி பெறலாம் என்ற நிலைமையில் நியூஸிலாந்து இருக்கிறது. மறுபுறம் இலங்கையிடம் நியூசிலாந்து தோற்று தங்களுடைய கடைசிப் போட்டியில் இங்கிலாந்தை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் இந்தியாவுடன் செமி ஃபைனலில் விளையாடலாம் என்ற நிலைமையில் பாகிஸ்தான் உள்ளது.

இந்த சூழ்நிலையில் தங்களுடைய சொந்த ஊரான கொல்கத்தாவில் இந்தியா விளையாடுவதை பார்க்க விரும்புவதால் பாகிஸ்தான் செமி ஃபைனலுக்கு தகுதி பெறுவதை விரும்புவதாக முன்னாள் கேப்டன் கௌரவ கங்குலி தெரிவித்துள்ளார். அதாவது இந்தியா தொடரை நடத்தும் நாடாக இருப்பதால் தங்களுடைய அரையிறுதி போட்டியை மும்பை அல்லது கொல்கத்தா ஆகிய இரண்டில் விளையாட ஏதேனும் ஒரு நகரத்தை தேர்வு செய்யும் உரிமையை கொண்டுள்ளது.

- Advertisement -

ஆனால் ஒருவேளை பாகிஸ்தான் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றால் பாதுகாப்பு பிரச்சினைகளால் மும்பைக்கு பதில் கொல்கத்தாவில் விளையாட விரும்புகிறோம் என்று ஐசிசியிடம் அந்நாட்டு வாரியம் ஸ்பெஷல் அனுமதியை வாங்கியுள்ளது. அதனால் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் செமி ஃபைனலுக்கு வந்தால் அப்போட்டி மும்பையில் நடைபெறும் என்பதால் பாகிஸ்தான் வரவேண்டும் என்று தெரிவிக்கும் கங்குலி இது பற்றி பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: ஒழுங்கா மன்னிப்பு கேளுங்க.. விராட் கோலி பற்றி போலி செய்தியை பரப்பிய.. பிரபல ஊடகத்தை விளாசிய கம்பீர்

“நான் கொல்கத்தாவில் நடைபெறும் செமி ஃபைனலுக்கு பாகிஸ்தான் வரும் என்று நம்புகிறேன். ஏனெனில் அங்கே இந்தியா – பாகிஸ்தான் மோதும் செமி ஃபைனல் போட்டி தான் உங்களுக்கு மிகப்பெரியதாக இருக்கும். விராட் கோலி கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர். அவர் கொல்கத்தாவில் 49வது ஒருநாள் சதம் அடித்ததை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. இதே தொடரில் அதை நெருங்கியும் தவற விட்ட அவர் கொல்கத்தாவில் தொட்டார்” என்று கூறினார். மேலும் இதுவரை தொடர்ச்சியாக வென்று வரும் இந்தியா கடைசி வரை இதே போல் விளையாடி கோப்பையை வெல்லும் என்று நம்புவதாகவும் கங்குலி தெரிவித்துள்ளார்.

Advertisement