ஒழுங்கா மன்னிப்பு கேளுங்க.. விராட் கோலி பற்றி போலி செய்தியை பரப்பிய.. பிரபல ஊடகத்தை விளாசிய கம்பீர்

Gautam Gambhir 5
- Advertisement -

நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் 2007 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் அதிகப்பட்ச ஸ்கோர் அடித்தும் 2011 உலகக்கோப்பை ஃபைனலில் 97 ரன்கள் குவித்தும் இந்தியாவின் மகத்தான வெற்றிகளில் முக்கிய பங்காற்றியவர். அதனால் உலகக் கோப்பை நாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்படும் அவர் ஓய்வுக்கு பின் வர்ணனையாளராக தோனி மற்றும் விராட் கோலி மீது அடிக்கடி விமர்சனங்களை வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

குறிப்பாக நவீன கிரிக்கெட்டில் நாயகனாக செயல்பட்டு வரும் விராட் கோலியை தொடர்ந்து அவர் விமர்சித்து வருவது ரசிகர்களிடைய அதிருப்தியை ஏற்படுத்துவதாக இருந்து வருகிறது. அதை விட 2012 ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் கேப்டனாக விராட் கோலியுடன் சண்டையில் ஈடுபட்ட அவர் 10 வருடங்கள் கழித்தும் பகையை மறக்காமல் கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் பயிற்சிளராக நெஞ்சோடு நெஞ்சாக மோதும் அளவுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

மன்னிப்பு கேளுங்க:
அந்த நிலைமையில் நடைபெற்று வரும் 2023 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதமடித்த விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை சமன் செய்தார். ஆனால் அதற்காக கடைசியில் சற்று மெதுவாக விளையாடிய உங்களுடைய ஆட்டம் இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்திருக்கலாம் என்று கௌதம் கம்பீர் விமர்சித்திருந்தார்.

இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மும்பையில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 91/7 என சரிந்த ஆஸ்திரேலியாவுக்கு தனி ஒருவனாக காயத்தையும் பிற்படுத்தாமல் வெறித்தனமாக விளையாடிய கிளன் மேக்ஸ்வெல் 201* (128) ரன்கள் குவித்து மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதிலும் குறிப்பாக 195 ரன்களில் இருந்த போது தன்னுடைய இரட்டை சதத்தை பற்றி கவலைப்படாமல் சிக்ஸர் அடித்து மேக்ஸ்வெல் 200 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.

- Advertisement -

அதை வைத்து “ஒருவேளை விராட் கோலி 195 ரன்களில் இருந்திருந்தால் சிங்கிள்கள் எடுத்திருப்பார். ஆனால் கிளன் மேக்ஸ்வெல் சிக்ஸர் அடிக்க முடிவை தேர்ந்தெடுத்தது தான் அவரை விராட் கோலியிடமிருந்து வித்தியாச படுத்துகிறது” என்று கௌதம் கம்பீர் விமர்சித்ததாக நியூஸ் 18 எனப்படும் பிரபலமான ஊடக நிறுவனம் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டிருந்தது.

இதையும் படிங்க: இதே பாகிஸ்தான் அணியை தோனியிடம் கொடுத்து பாருங்க.. அது நடக்கும்.. பாபர் அசாமை விமர்சித்த மனோஜ் திவாரி

ஆனால் உண்மையாகவே அவ்வாறு சொல்லாததால் கோபமடைந்த கம்பீர் சொன்னதற்கான ஆதாரத்தை கொடுங்கள் அல்லது மன்னிப்பு கேளுங்கள் என்று அந்த ஊடகத்தை விளாசியது பின்வருமாறு. “என்ன ஒரு முட்டாள் தனம். நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்பினால் அதை வெளிப்படையாக சொல்வேன். இப்படி ஒரு செய்தியை வெளியிட்ட இந்த அதிகாரப்பூர்வ பக்கங்கள் ஒன்று ஆதாரத்தை குறிப்பிட வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று புகைப்படத்துடன் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

Advertisement