இதே பாகிஸ்தான் அணியை தோனியிடம் கொடுத்து பாருங்க.. அது நடக்கும்.. பாபர் அசாமை விமர்சித்த மனோஜ் திவாரி

Manoj Tiwari
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் 1992 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கியது. சொல்லப்போனால் தங்களை பல வழிகளிலும் புறக்கணிக்கும் இந்தியாவுக்கு அவர்களுடைய சொந்த மண்ணில் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த உலகக்கோப்பையை பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என்பதே பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் விருப்பமாக இருந்தது.

அதற்கேற்றார் போல் நெதர்லாந்து மற்றும் இலங்கையை தோற்கடித்து நல்ல துவக்கத்தை பெற்ற அந்த அணி அதன் பின் இந்தியாவிடம் வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக உலக கோப்பையில் தோற்று ஆஸ்திரேலியாவிடமும் இருந்தது. அதை விட கத்துக்குட்டியாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக அவமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் சென்னையில் தென்னாப்பிரிக்காவிடம் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

- Advertisement -

தோனி இருந்தா:
அதனால் பின்னடைவு ஏற்பட்டாலும் வங்கதேசத்துக்கு எதிராக வென்ற பாகிஸ்தான் வலுவான நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் மழையின் உதவியுடன் வென்றது. இதனால் தங்களுடைய கடைசி போட்டியில் இங்கிலாந்தை தோற்கடிப்பதுடன் நியூசிலாந்து அதனுடைய கடைசி போட்டியில் தோற்றால் செமி ஃபைனல் செல்லலாம் என்ற நிலைமையில் பாகிஸ்தான் இருக்கிறது. முன்னதாக இந்த தோல்விகளுக்கு நட்சத்திர வீரர் பாபர் அசாம் பேட்டிங்கிலும் கேப்டன்ஷிப் செய்வதிலும் சுமாராக செயல்பட்டு முக்கிய காரணமாக அமைந்ததால் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் இதே பாகிஸ்தான் அணியை இந்தியாவின் மகத்தான முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியிடம் கொடுத்தால் தொடர்ந்து வெற்றி நடை போடும் என்று மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார். அதாவது பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேனாக வரும் திறமையை கொண்டிருந்தாலும் கேப்டனாக சரிப்பட்டு வர மாட்டார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இதே பாகிஸ்தான் அணியை தோனி தலைமையில் கொடுத்தால் தொடர்ச்சியாக வெற்றி நடை போடும் என்று நான் சவால் விடுவேன்”

- Advertisement -

“பாபர் அசாம் இத்தொடரில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்று நான் கருதுகிறேன். எடுத்துக்காட்டாக தடுமாறுகிறார் என்று தெரிந்தும் சடாப் கானுக்கு தொடர்ந்து அவர் பந்து வீசுவதற்கு கொடுத்த வாய்ப்புகள் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். நீங்கள் தடுமாறும் பவுலருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்காமல் அணியிலிருந்து நீக்கலாம். பாபர் அசாம் நல்ல பேட்ஸ்மேன்”

இதையும் படிங்க: சச்சின் மேல மரியாதை அதிகமாகுது.. இன்னைக்கு அது மொத்தமா ஏமாத்து வேலையாகிடுச்சு.. அக்தர் பரபரப்பு விமர்சனம்

“ஆனால் பாகிஸ்தானின் தோல்விக்காக அவரை மட்டும் விமர்சிப்பது நியாயமற்றது. சச்சின் அல்லது ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்கள் போல் வருவதற்கான திறமை அவரிடம் இருக்கிறது. சந்தேகமின்றி அவர் இந்த தலைமுறையின் சிறந்த பாகிஸ்தான் வீரர். ஆனால் கேப்டனாக அவர் வித்தியாசமாக சிந்தித்து செயல்பட வேண்டும். சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் தயாராகி திட்டங்களை மாற்ற வேண்டும்” என்று கூறினார்.

Advertisement