சச்சின் மேல மரியாதை அதிகமாகுது.. இன்னைக்கு அது மொத்தமா ஏமாத்து வேலையாகிடுச்சு.. அக்தர் பரபரப்பு விமர்சனம்

Shoaib Akhtar
Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் 80, 90களில் விளையாடப்பட்ட போட்டிகளுக்கும் தற்போது விளையாடப்படும் போட்டிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது என்றே சொல்லலாம். குறிப்பாக அந்த காலங்களில் 50 ஓவர்களில் 200 – 250 ரன்கள் அடிப்பதற்கே பேட்ஸ்மேன்கள் திண்டாடுவார்கள். அந்தளவுக்கு பவுலர்கள் மிகப்பெரிய சவாலாக இருந்து பேட்ஸ்மேன்களை விட வெற்றிகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கருப்பு குதிரை வீரர்களாக இருந்தனர்.

அதே போல சதமடிப்பதும் சிக்ஸர்கள் அடிப்பதும் சவாலாக இருந்த நிலைமையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிப்பதெல்லாம் குதிரை கொம்பாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய நவீன கிரிக்கெட்டில் பவுலர்களின் நிலைமை கத்தி மேல் நடப்பது போல் இருக்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் பேட்ஸ்மேன்கள் அசால்ட்டாக அடித்து நொறுக்குவதற்கு தகுந்தார் போல் பெரும்பாலான மைதானங்கள் பேட்டிங்க்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளன.

- Advertisement -

அக்தர் விமர்சனம்:
அத்துடன் முன்பெல்லாம் மைதானத்தின் சுற்றுச்சுவர் தான் பவுண்டரி அளவாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக ஐசிசியே 55 – 75 மீட்டர் என்ற அளவுக்கு பவுண்டர்களின் அளவை அதிகமாக குறைத்துள்ளதால் பேட்ஸ்மேன்கள் அசால்ட்டாக சிக்ஸர்களை அடிக்கின்றார்கள்.

இது போக ஒரு போட்டிக்கு 2 புதிய பந்துகள், நோபால் வீசினால் ஃபிரீ ஹிட், உள்வட்டத்திற்கு வெளியே 5 ஃபீல்டர்கள் மட்டுமே அனுமதி போன்ற பல்வேறு அடிப்படை விதிமுறைகளே பவுலர்களுக்கு எதிராகவும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும் இருக்கிறது. அதை பயன்படுத்தி இப்போதெல்லாம் 50 ஓவரில் 450 – 500 ரன்கள் அடிக்கப்படும் நிலையில் நிறைய பேட்ஸ்மேன்கள் அசால்ட்டாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதங்களை விளாசுகின்றனர்.

- Advertisement -

இதனால் உண்மையாகவே தற்போதைய கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமான போட்டி இருப்பதில்லை. இந்நிலையில் தற்போதைய போட்டிகள் புதிய விதிமுறைகளால் சமமின்றி ஏமாற்று வேலையாக மாறியுள்ளதாக சோயப் அக்தர் விமர்சித்துள்ளார். அதன் காரணமாக சச்சின் போன்றவர்களின் மீது மரியாதை அதிகரிப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: பெங்களூருவில் காத்திருக்கும் மழை.. நியூஸிலாந்து – இலங்கை போட்டி ரத்தானால்.. இந்தியாவுடன் மோத பாகிஸ்தான் வருமா?

“இன்றைய கிரிக்கெட் ஏமாற்று வேலையாகியுள்ளது. 2 புதிய பந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் பேட்ஸ்மேன்கள் 30000 ரன்களை எளிதாக அடிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் நான் சச்சின் டெண்டுல்கர், இன்சமாம், முகமது யூசுப், ஜேக் காலிஸ் போன்றவர்களை மதிக்கிறேன். ஏனெனில் அவர்கள் 50 ஓவர் போட்டிகளில் பழைய பந்துகளை எதிர்கொண்டு ரன்கள் அடித்தனர். அப்போதெல்லாம் ஒரே பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ரன்கள் அடிப்பவர்களுக்கு சாதகமாக நான் இருக்கிறேன். ஆனால் 30 யார்ட் வட்டத்திற்கு வெளியே 5 ஃபீல்டர்கள் நிறுத்தினால் அவர்களுக்கு உண்மையான நிலைமை தெரிய வரும்” என்று கூறினார்.

Advertisement