50 ஓவர் உலகக்கோப்பை செமி பைனல்ல இந்த 2 அணிகள் மோதுனா ரசிகர்களுக்கு ட்ரீட் தான் – கங்குலி விருப்பம்

Ganguly
- Advertisement -

கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது கைப்பற்றியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற 2015 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை தவறவிட்ட இந்திய அணி இம்முறை இந்தியாவில் முழுவதுமாக நடைபெறவுள்ள 2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று நினைப்புடன் காத்திருக்கிறது.

worldcup

- Advertisement -

வரலாற்றில் 13-வது முறையாக நடைபெற இருக்கும் இந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கிறது. மொத்தம் பத்து நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பை தொடரில் 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்த காத்திருக்கின்றன.

அதிலும் குறிப்பாக இந்திய அணி தங்களது முதல் போட்டியில் அக்டோபர் 8-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. அதனையடுத்து அக்டோபர் 15-ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

INDvsPAK-1

இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.

- Advertisement -

அதேபோல் நியூசிலாந்து அணியையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. பாகிஸ்தான் அணியும் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பில் இருக்கிறது. என்னை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதினால் அது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

இதையும் படிங்க : நாங்க வெஸ்ட் இண்டீஸ்க்கு எப்போ போனாலும். இந்திய அணியை அவர் வீட்டிற்கு அழைப்பார் – வெ.இ வீரர் குறித்து விராட் கோலி நெகிழ்ச்சி

உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தை நடத்தும் வாய்ப்பு கொல்கத்தா மைதானத்திற்கு வழங்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் சவுரவ் கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது. கடந்த உலகக்கோப்பை தொடரில் 5 சதங்களை அடித்த ரோஹித் சர்மா இம்முறையும் அசத்துவார் என்று கங்குலி நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement