நாங்க வெஸ்ட் இண்டீஸ்க்கு எப்போ போனாலும். இந்திய அணியை அவர் வீட்டிற்கு அழைப்பார் – வெ.இ வீரர் குறித்து விராட் கோலி நெகிழ்ச்சி

Virat-Kohli
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட்டு இருக்கிறது. இந்த தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.

IND-vs-WI

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது ஜூலை 12-ம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அனுபவ வீரரான கிரிஸ் கெயிலின் சொந்த ஊரான ஜமைக்காவில் எந்த போட்டியும் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் விராட் கோலி கலந்து கொண்டார்.

அதில் விராட் கோலியிடம் கிரிஸ் கெயிலை இங்கு சந்திப்பதற்கான திட்டம் ஏதும் இருக்கிறதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த விராட் கோலி கூறுகையில் : நான் அவருடன் பல ஆண்டுகளாக பழகி வருகிறேன். ஜமைக்காவில் இருக்கும் போது கண்டிப்பாக கிரிஸ் கெயிலை சந்திப்போம் என்று உறுதியாக நம்புகிறேன். அவர் எப்பொழுதுமே இந்திய அணியை முழுவதையும் வீட்டிற்கு அழைக்கிறார்.

Gayle 1

நாங்கள் அவருடைய இல்லத்திற்கு செல்லும்போது எல்லாம் அமைதியாகவும், நன்றாகவும் இருக்கும் என்று விராட் கோலி கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நிச்சயம் இம்முறையும் நாங்கள் அங்கு இருந்தால் அதையே செய்வோம் என்று நம்புகிறேன். அவர் எப்பொழுதுமே இந்திய அணியை அவரது வீட்டிற்கு அழைப்பார்.

- Advertisement -

நாங்கள் கடந்த முறை அவருடைய வீட்டிற்கு சென்றபோது கூட மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். அவர் மிகவும் எளிமையான சுதந்திரமான ஒரு மனிதர். அவர் இம்முறையும் ஊரிலிருந்தால் நிச்சயம் அவரை சந்திப்போம் என்று கோலி கூறினார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் விளையாடியதில் தனக்கு பிடித்த நிகழ்வு குறித்து பதிலளித்த விராட் கோலி கூறுகையில் :

இதையும் படிங்க : என்னால புஜாரா மாதிரியெல்லாம் ஆட முடியாது. என்னோட கேம் இனிமேலும் இப்படித்தான் இருக்கும் – ப்ரித்வி ஷா பேட்டி

எனக்கு மிகவும் பிடித்த மைதானம் ஆன்ட்டிகுவா மைதானம் தான். சர் விவியன் ரிச்சர்ட்ஸ் முன்னிலையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் எனது முதல் இரட்டை சதத்தை அங்கு பதிவு செய்தேன். அது எனக்கு மிகவும் விசேஷமான தருணம். நான் இரட்டை சதம் அடித்த அன்று மாலை என்னை நேரில் சந்தித்த விவியன் ரிச்சர்ட்ஸ் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். அதைவிட சிறப்பான நினைவு இருக்க முடியாது என்று விராட் கோலி கூறினார்.

Advertisement