அவர் பதவி விலகியிருந்தாலும் அவரோட வேலை இன்னும் பாக்கி இருக்கு – சவுரவ் கங்குலி ட்வீட்

Ganguly
- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான விராட் கோலி நேற்று மாலை டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக சமூக வலைதள பக்கம் மூலமாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் வெளியேறியதால் ரசிகர்கள் பலரும் இனி கோலியை கேப்டனாக பார்க்க முடியாதா என்று வருத்தம் அடைந்துள்ளனர்.

ஏற்கனவே பிசிசிஐ-க்கும் விராட் கோலிக்கும் கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு அதிகமாக இருந்து வந்ததாக பல்வேறு செய்திகள் வெளியாகின. இது குறித்த பல செய்திகளை நாம் அன்றாடம் பார்த்திருப்போம். ஏனெனில் டி20 உலக கோப்பை தொடர் முடிந்த பின்னர் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் கேப்டனாக செயல்பட விரும்பினார்.

- Advertisement -

ஆனால் பிசிசிஐ ஒருநாள் அணி தெரிவின் போது விராட் கோலியை எந்தவித காரணமும் இன்றி ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. அதனை தொடர்ந்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் அவர் கேப்டன் பதவியை துறந்துள்ளதால் பிசிசிஐ தலைவர் இதற்கு என்ன பதில் அளிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. இந்நிலையில் விராட் கோலியின் இந்த பதவி விலகல் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :

விராட் கோலியின் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. அதுமட்டுமின்றி விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியை மிக சிறப்பாக வழிநடத்தி இருக்கிறார் என்றும் அவர் பதவி விலகுவதாக எடுத்த முடிவு அவருடைய தனிப்பட்ட விருப்பம் அதனை பிசிசிஐ மதிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : அண்டர் 19 உலககோப்பை : முதல் போட்டியிலேயே நம்ம பசங்க பண்ண சம்பவம் – பத்தி தெரியுமா?

மேலும் எதிர்கால இந்திய அணியை பல புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்ல கோலியின் பங்களிப்பு மிகவும் முக்கியம். அதனால் ஒரு வீரராக விராட் கோலி தொடர்ந்து சிறப்பான பங்கினை அளிக்க எனது வாழ்த்துக்கள் என்று விராட் கோலி குறித்து சில கருத்துகளை கங்குலி பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement