அண்டர் 19 உலககோப்பை : முதல் போட்டியிலேயே நம்ம பசங்க பண்ண சம்பவம் – பத்தி தெரியுமா?

u 19 1
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் நாட்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி அண்டர் 19 உலக கோப்பை நேற்று முன்தினம் கோலாகலமாக துவங்கியது. கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பையின் 14வது தொடர் இந்த ஆண்டு முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் வங்கதேசம் உட்பட உலகின் 16 முன்னணி அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

u 19 2

- Advertisement -

லீக் சுற்று:
வெஸ்ட் நாட்டில் நேற்று முன்தினம் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வ செய்து வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று 4 லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன, அதில் 2வது போட்டியில் யாஷ் துள் தலைமையிலான இளம் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது.

கயானாவில் உள்ள ப்ரோவின்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று மாலை 6.30 மணிக்கு நடந்த இந்தப் போட்டி மழையால் சற்று தாமதமாக துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச தீர்மானித்தது.

u 19 3

தூக்கிய நிறுத்திய கேப்டன்:
இதை அடுத்து பேட்டிங்கை துவக்கிய இந்தியாவிற்கு தொடக்க வீரர்கள் ரகுவன்ஷி 5 ரன்கள் மற்றும் ஹர்னூர்சிங் 1 ரன் என மோசமான தொடக்கம் கொடுத்தனர். அடுத்ததாக வந்த ஷாய்க் ரஷித் 31 ரன்களில் நடையை கட்ட 82/3 என மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறியது.

- Advertisement -

அப்போது களமிறங்கிய இந்திய கேப்டன் “யாஷ் துள்” பொறுப்புடன் பேட்டிங் செய்து 100 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரிகள் உட்பட 82 ரன்கள் எடுத்து இந்தியாவை தாங்கிப்பிடித்தார். இருப்பினும் எதிர்ப்புறம் வந்த இந்திய வீரர்கள் தென்னாப்பிரிக்காவின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 46.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 232 ரன்கள் மட்டுமே எடுத்தது.

u 19

மிரட்டிய பவுலர்கள்:
இதை தொடர்ந்து 233 என்ற இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவை ஆரம்பம் முதலே இந்திய பவுலர்கள் அபாரமாக பந்துவீசி கட்டுப்படுத்தினார்கள், குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர் ஜான் குன்னிங்காமை முதல் ஓவரிலேயே இந்தியா டக் அவுட் செய்தது.

- Advertisement -

அடுத்ததாக வந்த தென்ஆப்பிரிக்க வீரர்களில் டேவால்ட் ப்ரேவிஸ் 65 ரன்களும் கேப்டன் ஜார்ஜ் வன் ஹீர்டென் 36 ரன்களும் எடுத்தனர். ஏனைய வீரர்கள் அனைவரும் இந்தியாவின் மிரட்டலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 30 ரன்களை கூட தாண்ட முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

u-19

இந்தியா வெற்றி:
இதனால் 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்ஆப்பிரிக்கா வெறும் 187 ரன்களுக்கு சுருண்டது. இதன் வாயிலாக 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி இந்த உலக கோப்பையில் தனது முதல் போட்டியிலேயே முதல் வெற்றியை பதிவு செய்து வெற்றி நடையை துவக்கியுள்ளது.

- Advertisement -

இப்போட்டியில் இந்தியா சார்பில் விக்கி ஓஸ்த்வால் 5 விக்கெட்டுகளும் ராஜ் பாவா 4 விக்கெட்டுகளும் சாய்த்தனர், இதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய விக்கி ஆட்டநாயகன் விருது வென்றார்.

இதையும் படிங்க : நீங்க எல்லாம் சாதிச்சிட்டீங்க. தலை நிமிர்ந்து போலாம் – கோலியின் பதவி விலகல் குறித்து ரவி சாஸ்திரி

அடுத்த போட்டி:
இந்த வெற்றியின் வாயிலாக இந்த உலக கோப்பையின் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா அந்தப் பிரிவின் புள்ளி பட்டியலில் 2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இதை அடுத்து இந்த உலக கோப்பையில் இந்தியா தனது 2-வது லீக் போட்டியில் வரும் ஜனவரி 19ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு அயர்லாந்தை எதிர்கொள்ள உள்ளது.

Advertisement