நீங்க எல்லாம் சாதிச்சிட்டீங்க. தலை நிமிர்ந்து போலாம் – கோலியின் பதவி விலகல் குறித்து ரவி சாஸ்திரி

shastri
- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே பதவி வகித்தபோது அவருக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே நேரடி மோதல்கள் இருந்தன. அது பலருக்கும் தெரிய வந்த வேளையில் தொடர்ந்து அணியில் குழப்பம் ஏற்பட்டது. அப்போது அணியின் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே தானாக முன்வந்து பதவி விலகியதால் அவருக்கு பதிலாக மாற்று பயிற்சியாளராக இந்திய அணிக்கு ரவிசாஸ்திரி தெரிவு செய்யப்பட்டார். பின்னர் விராத் கோலியுடன் ஏற்பட்ட நல்லுறவு காரணமாக தொடர்ந்து பயிற்சியாளராக செயல்பட்டார்.

பின்னர் ரவிசாஸ்திரி தனது பதவிக் காலம் முடிந்தும் மீண்டும் ஒருமுறை கேப்டன் கோலியின் ஆதரவுடன் தொடர்ச்சியாக இந்திய அணிக்கு பயிற்சியாளராக நீட்டிக்கப்பட்டார். கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் இணைந்து செயல்பட்ட காலத்தில் இந்திய அணி நிச்சயம் பல சிறப்பான வரலாற்று வெற்றிகளை குவித்து உள்ளது என்றே கூறலாம். அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவி சாஸ்திரி மற்றும் கோலி ஆகியோரது கூட்டணி செய்யாத சாதனைகளே இல்லை என்னும் அளவிற்கு இந்த ஜோடி வெற்றிகளை குவித்தது.

- Advertisement -

வேறு எந்த பயிற்சியாளர் இடமும் இல்லாத ஒரு பிணைப்பு ரவிசாஸ்திரி இடம் கோலிக்கு இருந்தது இதன் காரணமாகவே கோலி தொடர்ச்சியாக ரவிசாஸ்திரி உடன் உற்சாகமாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அண்மையில் முடிந்த டி20 உலக கோப்பை தொடருக்குப் பின்னர் தனது பதவியில் இருந்து வெளியேறிய ரவி சாஸ்திரி இப்போது கிரிக்கெட் குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்து வருவதுடன் மீண்டும் வர்ணனையாளராக மாறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறிய கோலி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக ரவிசாஸ்திரி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : விராட் நீங்கள் உங்கள் தலையை நிமிர்த்தி செல்லலாம். ஏனெனில் ஒரு கேப்டனாக நீங்கள் அனைத்து சாதனையையும் செய்துள்ளீர்கள். நிச்சயம் இந்தியாவின் வெற்றிகரமான மற்றும் ஆக்ரோஷமான கேப்டன் என்றால் அது நீங்கள் தான்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி எடுத்த இந்த திடீர் முடிவு எனக்கு எப்படி இருக்கு தெரியுமா? – மனம் திறந்த ரோஹித் சர்மா

தனிப்பட்ட முறையில் இது எனக்கு ஒரு சோகமான நாளாக இருந்தாலும் இந்திய அணியை நாம் இரண்டு பேரும் உருவாக்கி இருக்கிறோம் என்பதை நினைத்து மகிழ்ச்சி என்று அவர் விராட் கோலியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement