WTC Final : கங்குலி முதல் நாசர் ஹுசைன் வரை – ஃபைனலில் ரசிகர்களை மகிழ்விக்க வரும் வர்ணனையாளர்கள் லிஸ்ட் இதோ

- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் வருகையால் மவுசு குறைந்த டெஸ்ட் போட்டிகளை உயிர்ப்பிக்கும் வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனும் பிரத்தியேகமான உலக கோப்பையை ஐசிசி அறிமுகப்படுத்தியது. அதன் காரணமாக தரவரிசையில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு கோப்பை கிடையாது மாறாக 2 வருடங்களாக நடைபெறும் லீக் சுற்றில் ஒவ்வொரு போட்டியிலும் வென்று புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை ஃபைனலில் வென்றால் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்ல முடியும் என்ற நிலைமை உருவானது. அதனால் முன்பை விட இப்போதெல்லாம் ட்ரா செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு வெற்றி காண வேண்டும் என்ற எண்ணத்துடன் அனைத்து அணிகளும் விளையாடுகின்றன.

WTC

- Advertisement -

அதன் பயனாக சமீபத்தில் இங்கிலாந்தை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோற்கடித்தது போல் மீண்டும் டெஸ்ட் போட்டிகள் உயிர்ப்பித்துள்ளன. அந்த வகையில் 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடரில் விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்று லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா சௌதம்டன் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் வழக்கம் போல நியூசிலாந்திடம் சொதப்பி கோப்பையை கோட்டை விட்டது.

வர்ணனையாளர்கள் பட்டியல்:
அப்போதிலிருந்து துவங்கிய 2வது தொடரில் தென்னாப்பிரிக்காவில் தோல்வியை சந்தித்த இந்தியாவுக்கு விராட் கோலி கேப்டனாக பதவி விலகியது பின்னடைவாக அமைந்தது. அதனால் ஃபைனல் வாய்ப்பு கேள்விக்குறியானாலும் ரோகித் சர்மா தலைமையில் சமீபத்திய வங்கதேச தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா தங்களது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை 2 – 1 (4) என்ற கணக்கில் வீழ்த்தி பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்றது. அதனால் புள்ளி பட்டியலில் 2வது இடம் பிடித்த இந்தியா முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியாவை வரும் ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தின் லண்டனில் இருக்கும் புகழ்பெற்ற ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஃபைனலில் எதிர்கொண்டு வெல்வதற்காக வலைப்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த மாபெரும் ஃபைனலை தொலைக்காட்சி வாயிலாக பார்க்கும் ரசிகர்களுக்கு போட்டியின் நுணுக்கமான தருணங்களை தெளிவுடன் வர்ணனை செய்து ஆர்வத்தை ஏற்படுத்தி விருந்து படைக்கப் போகும் வர்ணனையாளர் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன் படி இந்தியாவில் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பு உள்ளது. அதில் கடந்த ஃபைனலில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி, கடந்த முறை பிசிசிஐக்கே தலைவராக இருந்த முன்னாள் நட்சத்திர கேப்டன் சௌரவ் கங்குலி ஆகியோர் இம்முறை வர்ணனையாளர்களாக செயல்பட்டு ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.

- Advertisement -

குறிப்பாக சௌர கங்குலி இந்தி மொழியில் வர்ணனை செய்யும் நிலையில் ரவி சாஸ்திரி ஆங்கில மொழியில் வர்ணனை செய்ய உள்ளார். அதில் கேப்டன்ஷிப் விவகாரத்தில் விரிசல் ஏற்பட்ட விராட் கோலி இந்த போட்டியில் விளையாடும் போது கங்குலி எப்படி என்ன பேசப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Ganguly-1

அது போக முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர், ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் மேத்தியூ ஹைடன், ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் போன்ற நட்சத்திரங்களும் வர்ணனையாளராக செயல்பட உள்ளனர். அத்துடன் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் அந்தந்த மாநிலங்களிலிருந்து இந்தியாவுக்கு விளையாடிய முன்னாள் வீரர்கள் வர்ணனையாளர்களாக செயல்பட உள்ளனர். அந்த பட்டியல் இதோ:

இதையும் படிங்க:WTC Final : அது முடிஞ்சு போன கதை, ஆஷஸ் முன்னாடி தரமான இந்தியாவை சாய்ச்சுட்டு தான் போவோம் – நேதன் லயன் பேட்டி

உலக வர்ணனை (ஆங்கிலம்) : ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் நாசர் ஹுசைன், மேத்தியூ ஹைடன், குமார் சங்ககாரா, ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லேங்கர், தினேஷ் கார்த்திக், ஹர்ஷா போக்லே
ஹிந்தி : சௌரவ் கங்குலி, ஹர்பஜன் சிங், தீப் தாஸ்குப்தா, ஸ்ரீசாந்த்
தமிழ் : சடகோபன் ரமேஷ், லக்ஷ்மிபதி பாலாஜி, எஸ் ஸ்ரீராம், யோ மகேஷ்.
தெலுங்கு : கௌஷிக் என்சி, ஆசிஸ் ரெட்டி, டி சுமன், கல்யாண் கே
கன்னடம் : விஜய் பரத்வாஜ், ஸ்ரீனிவாசா, பி சிப்லி, பவன் தேஷ்பாண்டே, சுனில் ஜே

Advertisement