WTC Final : அது முடிஞ்சு போன கதை, ஆஷஸ் முன்னாடி தரமான இந்தியாவை சாய்ச்சுட்டு தான் போவோம் – நேதன் லயன் பேட்டி

Nathan-Lyon-1
- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. வரும் ஜூன் 7 – 11 வரை நடைபெறும் அந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்காக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் லண்டனில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் கடந்த ஃபைனலில் விராட் கோலி தலைமையில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்விகளிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு இம்முறை ரோகித் சர்மா தலைமையில் சிறப்பாக செயல்பட்டு இந்தியா கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

மறுபுறம் முதல் முறையாக இந்த ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ள ஆஸ்திரேலியா ஏற்கனவே 50 ஓவர் 20 ஓவர் கோப்பைகளை வென்றது போல் முதல் முயற்சியிலேயே இந்த கோப்பையையும் வெல்ல தயாராகி வருகிறது. இவ்விரு அணிகளை பொறுத்த வரை என்ன தான் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தாலும் 2013க்குப்பின் நாக் அவுட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்தியா ஸ்விங் வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் தருமாறுவது வழக்கமாகும்.

ஆஸ்திரேலியாவின் ஆட்டம்:
மறுபுறம் ஐசிசி தொடர்களில் நாக் அவுட் போட்டிகளில் பெரும்பாலும் அசத்தும் தன்மையை கொண்ட ஆஸ்திரேலியா ஃபைனலில் தரமாக செயல்படுவதன் காரணத்தாலேயே 5 உலகக் கோப்பைகளை வென்ற அணியாக திகழ்கிறது. இருப்பினும் கடைசியாக 2 முறை ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2 – 1 (4) என்ற கணக்கில் வீழ்த்தி சரித்திரம் படைத்த இந்தியா சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் தங்களது சொந்த மண்ணில் 2 – 1 (4) என்ற கணக்கில் வென்று தான் இந்த ஃபைனலுக்கே வந்துள்ளது. அந்த வரிசையில் இந்த போட்டியிலும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து கோப்பையை வெல்ல இந்தியா போராட உள்ளது.

இருப்பினும் கடந்த தொடர்களில் சந்தித்த தோல்விகள் முடிந்து போன கதை என்று தெரிவிக்கும் ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன் இப்போட்டியில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி தரமான இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அடுத்ததாக பரம எதிரி இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஆஷஸ் தொடரிலும் வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் நாங்கள் ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளோம். ஆனால் அதற்கு முன்பாக பெரிய போட்டியில் களமிறங்க உள்ளோம். இந்த ஃபைனலுக்கு பின்பு தான் எங்களுடைய பெரிய சீசன் துவங்குகிறது”

- Advertisement -

“அதற்கு இப்போதே நன்கு தயாராகி திட்டமிடும் வாய்ப்பை பெறுவதை நினைத்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஃபைனலில் பெரிய ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடுவது மிகவும் ஸ்பெஷலாக இருக்கும். மேலும் ஒவ்வொரு ஆஸ்திரேலிய ரசிகர்களும் ஆஷஸ் தொடருக்கு ஆவலுடன் காத்திருப்பார்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அவர்கள் இந்த போட்டியையும் ஆவலுடன் பார்க்க வேண்டும். குறிப்பாக இந்தியாவில் நடந்த கடைசி தொடரில் சந்தித்த தோல்வியை நீங்கள் துடைத்து விடலாம்”

lyon 2

“ஏனெனில் இந்த இரு அணிகளும் தரமான வீரர்களைக் கொண்டுள்ளது. அதனால் இது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இந்திய அணியில் சில கிளாஸ் நிறைந்த பேட்ஸ்மேன்களும் பவுலர்களும் இருக்கின்றனர். எனவே வலுவான வீரர்களைக் கொண்ட இரு அணிகளும் இந்த ஒரு போட்டியில் வெற்றிக்காக மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள உள்ளன. எது எப்படி இருந்தாலும் எங்களை பொறுத்த வரை கடந்த தோல்விகளை கடந்து இப்போட்டியில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி இந்தியாவை வெற்றி காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க:SL vs AFG : ஹூ.. ஹூம்.. இனிமே இலங்கையை யாரும் காப்பாத்த முடியாது – வரலாறு படைக்க ஆப்கானிஸ்தானுக்கு வாய்ப்பு

முன்னதாக இந்தியாவைப் போலவே ஆஷஸ் தொடரிலும் இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்து வருகிறது. குறிப்பாக 22 வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் தொடரை வெல்ல முடியாமல் தவிக்கும் ஆஸ்திரேலியா இம்முறை ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து அதனால் கிடைக்கும் புத்துணர்ச்சியுடன் சாதிக்குமென்று நேதன் லயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement