5 ஓவரில் 59 ரன்ஸ்.. வங்கதேசத்தை மண்ணை கவ்வ வைத்த அமெரிக்க அணி.. சரித்திர சாதனை வெற்றி

- Advertisement -

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. விரைவில் நடைபெறும் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு தயாராக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி மே 21ஆம் தேதி ஹவுஸ்டன் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் மிகுந்த போராட்டத்திற்கு பின் 20 ஓவரில் 153/6 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே லிட்டன் தாஸ் 14, சௌமியா சர்க்கார் 20, கேப்டன் சாந்தோ 3 (11) ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். போதாக்குறைக்கு சாகிப் அல் ஹாசன் 6 (12) ரன்களில் ரன் அவுட்டானதால் 68/4 என திணறிய வங்கதேசம் 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

வரலாற்று வெற்றி:
இருப்பினும் அப்போது நிதானமாக விளையாடிய தவ்ஹீத் ஹெரிடாய் அதிகபட்சமாக 58 (47) ரன்களும் முகமதுல்லா 31 (22) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர். மறுபுறம் பந்து வீச்சில் அசத்திய அமெரிக்க அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்டீபன் டைலர் 3 ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 154 ரன்களை துரத்திய அமெரிக்க அணிக்கு கேப்டன் மோனக் பட்டேல் 12 (10) ரன்னில் அவுட்டானார்.

அடுத்ததாக வந்த ஆண்ட்ரீஸ் ஹவுஸ் 23 (18) ரன்களில் அவுட்டான நிலையில் மறுபுறம் தடுமாறிய மற்றொரு துவக்க வீரர் ஸ்டீவன் டெய்லர் 28 (29) ரன்களில் நடையை கட்டினார். மிடில் ஆர்டரில் நிதிஷ் குமார் 10 (10), ஆரோன் ஜோன்ஸ் 4 (12) ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதால் அமெரிக்காவின் வெற்றி கேள்விக்குறியானது.

- Advertisement -

ஏனெனில் கடைசி 5 ஓவரில் அந்த அணி வெற்றி பெற 59 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த ஹர்மீத் சிங் மற்றும் கோரி ஆண்டர்சன் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். அதில் முன்னாள் நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் 34* (25) ரன்களும் இந்தியாவுக்காக அண்டர்-19 உலகக் கோப்பையில் விளையாடிய முன்னாள் வீரர் ஹர்மீத் சிங் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 33* (13) ரன்கள் குவித்து அற்புதமான ஃபினிஷிங் கொடுத்தனர். அதனால் 19.3 ஓவரிலேயே 156/5 ரன்கள் எடுத்த அமெரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: இதை மட்டும் பண்ணா இந்த வருஷம் உங்களுக்கு தான் கப்.. ஓய்வறையில் சந்தித்த விராட் கோலிக்கு தோனி அட்வைஸ்

இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்து அமெரிக்கா புதிய வரலாற்றுச் சாதனை படைத்தது. அத்துடன் ஐசிசி டாப் 10 தரவரிசையில் இருக்கும் ஒரு அணிக்கு எதிராக தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்து மற்றொரு சாதனை படைத்த அமெரிக்கா 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக முஸ்தபிசூர் ரஹ்மான் 2 விக்கெட்டுகள் எடுத்தும் கத்துக்குட்டி அமெரிக்காவிடம் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement