SL vs AFG : ஹூ.. ஹூம்.. இனிமே இலங்கையை யாரும் காப்பாத்த முடியாது – வரலாறு படைக்க ஆப்கானிஸ்தானுக்கு வாய்ப்பு

SL-vs-AFG
- Advertisement -

கடந்த இரண்டு மாதங்களாக ரசிகர்களை மகிழ்வித்து வந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதன் காரணமாக அடுத்ததாக தற்போது ரசிகர்கள் அனைவரும் உலக கிரிக்கெட் மீது தங்களது பார்வையை திருப்பி உள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

Fazal

- Advertisement -

அந்த வகையில் இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியானது இன்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 268 ரன்கள் குவித்தது. இலங்கை அணி சார்பாக அசலங்கா 91 ரன்களையும், தனஞ்ஜெயா டி சில்வா 51 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 269 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி ஆப்கானிஸ்தான் 46.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 269 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Afg

அதோடு சர்வதேச கிரிக்கெட்டில் தங்களுடைய இரண்டாவது பெரிய வெற்றியையும் ஆப்கானிஸ்தான் அணி பதிவு செய்துள்ளது. அதோடு இந்த தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றியுடன் துவங்கியுள்ளதால் இனிவரும் 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட இலங்கை மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாறு படைக்க அவர்களுக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் வளர்ந்து வரும் அணியான ஆப்கானிஸ்தான் அணியிடம் இலங்கை அணி அதன் சொந்த மண்ணிலேயே தோல்வியை சந்தித்தால் இந்த இலங்கை அணியால் இனி எந்த அணியைத் தான் வீழ்த்த முடியும் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் 50 ஓவர் உலக கோப்பை தொடரானது நடைபெறவுள்ள வேளையில் இலங்கை அணி பெற்ற இந்த தோல்வி அந்த அணிக்கு மேலும் சிக்கலை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க : WTC Final : போன ஃபைனலில் நாங்க செஞ்ச தப்ப செஞ்சுறாதீங்க – பிளேயிங் லெவன் பற்றி இந்தியாவை எச்சரிக்கும் எம்எஸ்கே பிரசாத்

இப்படி வளர்ந்து வரும் அணிகள் கிட்டயே தோல்வியை சந்திக்கும் போது பெரிய அணிகளிடம் எவ்வாறு வெற்றி பெறப் போகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதுடன், இனி இலங்கை அணியை காப்பாற்ற வாய்ப்பே இல்லை என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement