WTC Final : போன ஃபைனலில் நாங்க செஞ்ச தப்ப செஞ்சுறாதீங்க – பிளேயிங் லெவன் பற்றி இந்தியாவை எச்சரிக்கும் எம்எஸ்கே பிரசாத்

Prasad
- Advertisement -

ஐசிசி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதி போட்டி வரும் ஜூன் 7 முதல் 11ஆம் தேதி வரை இங்கிலாந்தில் இருக்கும் புகழ்பெற்ற லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது சாம்பியனை தீர்மானிக்கப் போகும் இந்த மாபெரும் இறுதி போட்டியில் 2021 முதல் நடைபெற்று வந்த லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. குறிப்பாக கடந்த ஃபைனலில் விராட் கோலி தலைமையில் நியூசிலாந்திடம் நழுவ விட்ட கோப்பையை இம்முறை ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

பொதுவாக சுழலுக்கு சாதகமான மைதானங்களில் வளர்ந்த இந்திய அணியினர் ஸ்விங் வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் தடுமாறுவது வழக்கமாகும். எனவே அதை சமாளிப்பதற்கு முன்கூட்டியே பயணித்து தேவையான பயிற்சிகளை எடுத்து இங்கிலாந்தின் கால சூழ்நிலைகளுக்கு தகுந்த 11 பேரை தேர்வு செய்வதே வெற்றிக்கான முதல் படியாகும். குறிப்பாக இங்கிலாந்து மண்ணில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு ஸ்பின்னர் என்ற பந்து வீச்சு கூட்டணியுடன் களமிறங்கினால் மட்டுமே வெற்றிக்கு போராட முடியும்.

மறுபடியும் பண்ணிடாதீங்க:
இருப்பினும் சௌதம்ப்டன் நகரில் நடைபெற்ற கடந்த ஃபைனலில் ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, அஸ்வின் – ஜடேஜா என 3 வேகம் மற்றும் 2 ஸ்பின் பவுலர்களுடன் களமிறங்கிய இந்தியா பிளேயிங் லெவனை ஒருநாள் முன்பாகவே தைரியமாக அறிவித்தது. ஆனால் கடைசி நேரத்தில் மழை வந்ததால் ஈரப்பதமான சூழ்நிலையில் நடைபெற்ற அந்த போட்டியில் 4 வேகம் 1 ஸ்பின் பவுலர்களுடன் களமிறங்கிய நியூசிலாந்து அட்டகாசமாக செயல்பட்டு வென்றது. மறுபுறம் பும்ரா உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் திணறிய நிலையில் அஸ்வின் தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும் ஈரப்பதமான சூழ்நிலையால் ஜடேஜாவுக்கு பந்து வீசும் வாய்ப்பை கூட வழங்க முடியாத நிலைமைக்கு விராட் கோலி தள்ளப்பட்டார்.

ashwin

அந்த நிலையில் இம்முறை ஃபைனல் நடைபெறும் ஓவல் மைதானம் இங்கிலாந்தில் இருக்கும் இதர மைந்தனங்களைக் காட்டிலும் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் மீண்டும் நல்ல ஃபார்மில் இருக்கும் அஸ்வின் – ஜடேஜா ஆகியோர் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஃபைனலில் செய்த அதே 2 ஸ்பின்னர்கள் தவறை மீண்டும் செய்து விடாதீர்கள் என்று இந்திய அணியினரை கடந்த முறை தேர்வு செய்த முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கடந்த ஃபைனலில் நாங்கள் 3 ஸ்பின்னர்கள் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும். ஆனால் கடைசி நேரத்தில் மழை வந்து பின்னடைவை கொடுத்தது. அந்த சமயத்தில் நாங்கள் எங்களுடைய திட்டத்தை மாற்றியிருக்க வேண்டும். ஆனால் எப்படியோ மீண்டும் அதே பிளேயிங் லெவலுடன் நாங்கள் களமிறங்கினோம். இருப்பினும் அது கடந்த காலமாகும். தற்போது பிளேயிங் லெவனை தேர்வு செய்வது ஓவல் மைதானத்தை பொறுத்து அமைய வேண்டும்”

Prasad

“இந்த போட்டியின் முக்கிய கதை அங்குள்ள பிட்ச் மற்றும் கால சூழ்நிலைகளை பொறுத்து அமையும். குறிப்பாக அங்கு போட்டி நடைபெறும் 5 நாட்களில் எந்த மாதிரியான வானிலை நிலவும் என்பது நமக்கு தெரியாது. எனவே இம்முறை முன்கூட்டியே பிளேயிங் லெவன் பற்றி நாம் திட்டமிடக்கூடாது. அத்துடன் போட்டி துவங்கும் சமயத்தில் கால சூழ்நிலைகளை பார்த்துக் கொண்டு உங்களிடம் இருக்கும் வீரர்களில் சரியானவர்களை தேர்வு செய்து ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:2003இல் அடுத்த சச்சினா வருவார்ன்னு நினைச்சோம் ஆனா – பாழான இந்திய வீரரின் கேரியர் பற்றி ஆகாஷ் சோப்ரா ஆதங்கம்

அவர் கூறுவது போல இம்முறை அஸ்வின் அல்லது ஜடேஜா ஆகியோரில் ஒருவரை மட்டும் தேர்வு செய்வது 4வது பவுலராக ஷார்துல் தாகூர் விளையாடுவதே சிறந்த தேர்வாக இருக்கும். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியில் 4வது பவுலராக கேமரூன் கிரீன் விளையாடப் போகிறார் என்பதை பார்த்தாவது இந்தியா மீண்டும் அந்த தவறை செய்யக்கூடாது என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது.

Advertisement