2003இல் அடுத்த சச்சினா வருவார்ன்னு நினைச்சோம் ஆனா – பாழான இந்திய வீரரின் கேரியர் பற்றி ஆகாஷ் சோப்ரா ஆதங்கம்

Aakash Chopra
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக குஜராத்துக்கு எதிராக நடைபெற்ற ஃபைனலில் ரோஹித் சர்மாவின் போராட்டத்தையும் தாண்டி கடைசி 2 பந்துகளில் சிக்ஸரையும் பவுண்டரியும் விளாசிய ஜடேஜா மறக்க முடியாத திரில் வெற்றி பெற்று கொடுத்தார். மேலும் அந்த போட்டியில் முக்கிய நேரத்தில் 6, 4, 6 என மோகித் சர்மா ஓவரில் அடுத்தடுத்த பவுண்டரிகளை விளாசி 19 (8) ரன்களை அடித்த அம்பத்தி ராயுடு வெற்றியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி கோப்பையை வென்று கண்ணீருடன் விடைபெற்றார்.

Rayudu 1

- Advertisement -

ஹைதராபாத்தைச் சேர்ந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி கடந்த 2010இல் மும்பை அணிக்காக முதல் முறையாக விளையாட துவங்கினார். அந்த அணியில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு 2013, 2015, 2017 ஆகிய வருடங்களில் கோப்பையை வெல்ல உதவிய அவர் இந்தியாவுக்காகவும் 2013ஆம் அறிமுகமானார். இருப்பினும் அதில் சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்ட அவர் மீண்டும் 2018 சீசனில் 603 ரன்களை விளாசி சென்னை 3வது கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு பெற்று அசத்திய அவர் 2019 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு தகுதியான செயல்பாடுகளை வெளிப்படுத்தி காத்திருந்தார்.

சச்சின் மாதிரி:
இருப்பினும் கடைசி நேரத்தில் 4வது இடத்தில் விளையாடுபவர் முப்பரிமாண வீரராக இருக்க வேண்டும் என்று கருதிய அப்போதைய எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு விஜய் சங்கரை தேர்வு செய்தது. அதனால் ஏமாற்றமடைந்து 3டி ட்வீட் போட்டதை வன்மமாக மாற்றிய தேர்வுக்குழு மேற்கொண்டு வாய்ப்பு கொடுக்காததால் மனமுடைந்த ராயுடு 33 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற தற்போது 6 கோப்பைகளை வென்று ஐபிஎல் ஜாம்பவானாக விடை பெற்றுள்ளார்.

Rayudu

இந்நிலையில் 2003இல் இந்தியா ஏ அணிக்காக தேர்வான போது அடுத்த சச்சினாக வருவார் என்று பாராட்டும் அளவுக்கு ராயுடு அசத்தியதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பழைய நினைவுகளை அவர் பகிர்ந்தது பின்வருமாறு. “ராயுடு உடனான என்னுடைய முதல் சந்திப்பை நான் பகிர விரும்புகிறேன். அது 2003 இந்தியா ஏ அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் நடந்தது. அப்போது 16 வயதான ராயுடு எனும் பையன் தேர்வு செய்யப்பட்டார். குறிப்பாக அந்த சமயத்திலேயே நல்ல திறமையை கொண்டிருந்ததால் அடுத்த சச்சினாக வருவார் என்ற நம்பிக்கையுடன் அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்”

- Advertisement -

“அதற்கேற்றார் போல் அவரும் சச்சினை போல பேட்டிங், ஃபீல்டிங் மட்டுமல்லாமல் அவ்வப்போது பந்து வீச்சிலும் அசத்தினார். அந்த சமயத்தில் எங்களுடைய இயக்குனராக இருந்த அசோக் மல்கோத்ரா அவர் இந்திய அணியின் வருங்காலமாக இருப்பார் என்று கருதி நிறைய ஆதரவுகளை கொடுத்தார். மேலும் அப்போது கேப்டனாக இருந்த விவிஎஸ் லக்ஷ்மண் உள்ளூர் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அவரை பார்த்து கவரப்பட்டார்”

Chopra

“அந்த நிலைமையில் எங்களுடைய அணியில் ஒரு ஆஃப் ஸ்பின்னர் இல்லை. முரளி கார்த்திக் லெப்ட் ஆர்ம் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா லெக் ஸ்பின்னர் ஆகியோர் தான் இருந்தனர் அதே போல பேட்டிங்கில் கௌதம் கம்பீர், கானர் வில்லியம், லக்ஷ்மன், அபிஜித் காலே மற்றும் நான் இருந்தோம். அதனால் ஆஃப் ஸ்பின் பந்துகளை வீச தெரிந்த அம்பத்தி ராயுடு விளையாட வாய்ப்பு பெற்றார். இருப்பினும் மிகவும் இளமையாக கீழ் பேட்டிங் வரிசையில் விளையாடிய அவர் அனுபவமின்றி பந்து வீசியதால் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக எதிர்கொண்டனர். அந்த வகையில் ஆரம்பத்தில் சுமாராக செயல்பட்ட அவர் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி பின்னர் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IPL 2023 : நடப்பு ஐ.பி.எல் தொடரின் பெஸ்ட் பிளேயிங் லெவனை தேர்வு செய்த இர்பான் பதான் – லிஸ்ட் இதோ

அப்படி உள்ளூர் அளவில் போராடியும் சர்வதேச அளவில் ஜொலிக்க முடியாத ராயுடுவின் திறமையை தெரிந்த தோனி ஃபைனலில் வெற்றிக் கோப்பையை அவரது கையில் கொடுத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement