IPL 2023 : நடப்பு ஐ.பி.எல் தொடரின் பெஸ்ட் பிளேயிங் லெவனை தேர்வு செய்த இர்பான் பதான் – லிஸ்ட் இதோ

Irfan-pathan
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அதோடு அதிக முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணியின் சாதனையையும் சிஎஸ்கே அணி இந்த வெற்றியின் மூலம் சமன் செய்து அசத்தியுள்ளது.

CSK

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்று விளையாடிய அனைத்து அணிகளின் வீரர்களையும் சேர்த்து நடப்பு ஐபிஎல் தொடரின் சிறந்த ப்ளேயிங் லெவனை முன்னாள் வீரர்கள் பலரும் கணித்து பட்டியலிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்ஃபான் பதானும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். அந்த வகையில் அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியின் கேப்டனாக டூப்ளிசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதோடு அவருடன் துவக்க வீரராக சுப்மன் கில்லை அவர் தேர்வு செய்துள்ளார்.

Faf Du Plessis 96

அதோடு மிடில் ஆர்டரில் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். மேலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஹென்ரிச் கிளாசினை தேர்வு செய்துள்ளார், மேலும் பின் வரிசையில் பினிஷராக ரிங்கு சிங்கையும், ஆல்ரவுண்டர்களாக ரஷீத் கான் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

மேலும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது ஷமி, முகமது சிராஜ், மோஹித் சர்மா ஆகியோரை தேர்வு செய்துள்ளார். மேலும் இம்பேக்ட் வீரராக மதீஷா பதிரானாவை சேர்த்துள்ளார். அதன்படி நடப்பு ஐபிஎல் தொடருக்கான இர்ஃபான் பதான் தேர்வு செய்துள்ள பெஸ்ட் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : இலங்கை அணிக்கெதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து வெளியேறிய ரஷீத் கான் – அவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

1) டூபிளெஸ்ஸிஸ், 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹென்ரிச் கிளாசன், 6) ரிங்கு சிங், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ரஷீத் கான், 9) முகமது ஷமி, 10) முகமது சிராஜ், 11) மோஹித் சர்மா. (இம்பேக்ட் வீரர் : மதீஷா பதிரானா)

Advertisement