இலங்கை அணிக்கெதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து வெளியேறிய ரஷீத் கான் – அவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

Rashid-Khan
- Advertisement -

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரஷீத் கான் இலங்கை அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டியில் விளையாடவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடிய ரஷீத் கான் அந்த பரிசளிப்பு விழாவின் கூட பங்கேற்காமல் இரவோடு இரவாக ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாட வேண்டும் என்று ஸ்ரீலங்கா புறப்பட்டு சென்றார்.

Rashid Khan 1

- Advertisement -

இருப்பினும் அவர் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளை தவற விட்டுள்ளது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. ஏனெனில் எப்போதுமே அவர் தனது தாய் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணம் உடையவர். தேசிய அணி கலந்துகொள்ளும் போட்டிகளில் தவறவிடாமல் பங்கேற்கும் பழக்கமும் உடையவர்.

அந்த வகையில் 24 வயதான ரஷீத் கான் உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டிகளில் சூப்பர் ஸ்டாராக பங்கேற்று விளையாடி வருகிறார். ஆனாலும் சர்வதேச கிரிக்கெட்டில் தாய் நாட்டுக்காக அவர் விளையாடவும் தவறுவதில்லை. எந்த ஒரு ஆப்கானிஸ்தான் அணி விளையாடும் போட்டியையும் தவறவிடாமல் விளையாடி வரும் அவர் இந்த இலங்கை ஒருநாள் தொடரின் இரண்டு போட்டியில் விளையாடாதது ஏன்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழும்பியுள்ளது.

rashid

அதன்படி கடந்த ஜூன் 2022-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை ஒரு ஆண்டில் அவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக 22 டி20 போட்டிகளிலும், 6 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்று உள்ளார். அதோடு உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டிகளில் 81 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

- Advertisement -

இப்படி ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ள அவருக்கு தற்போது கீழ் முதுகில் பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த காயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் சரியாகிவிடும். ஆனால் அதே பிடிப்புடன் விளையாடினால் அது காயமாக கூட மாற வாய்ப்பு இருக்கும் என்பதனால் முன்னெச்சரிக்கை காரணமாகவே அவர் இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதையும் படிங்க : IPL 2023 : ஃபைனலுக்கு குஜராத் வரக்கூடாதுன்னு நெனச்சோம், அது தான் மும்பை சென்னையின் வெற்றி ரகசியம் – ராயுடு பேட்டி

இலங்கைக்கு எதிரான இந்த முதல் இரண்டு போட்டிகளில் ரஷீத் கான் விளையாடவில்லை என்றாலும் நிச்சயம் இன்னும் சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement