IPL 2023 : ஃபைனலுக்கு குஜராத் வரக்கூடாதுன்னு நெனச்சோம், அது தான் மும்பை சென்னையின் வெற்றி ரகசியம் – ராயுடு பேட்டி

rayudu 2
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கோடைகாலத்தில் மகிழ்வித்து நிறைவு பெற்றுள்ள ஐபிஎல் 2023 டி20 தொடரின் மாபெரும் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை அதன் சொந்த ஊரான அகமதாபாத் மைதானத்தில் தோற்கடித்த சென்னை 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் சாதனையை சமன் செய்தது. மழையால் ரிசர்வ் நாளில் நடைபெற்ற அந்த போட்டியில் 2 அணிகளும் கடுமையாக போராடிய நிலையில் மோகித் சர்மா வீசிய கடைசி 2 பந்துகளில் சிக்ஸரும் பவுண்டரியும் அடித்த ரவீந்திர ஜடேஜா எளிதில் மறக்க முடியாத திரில் வெற்றியை சென்னைக்கு பெற்று கொடுத்தார்.

Rayudu

- Advertisement -

அந்த போட்டியில் ரகானே, சிவம் துபே என அனைவருமே வெற்றியில் முக்கிய பங்காற்றிய நிலையில் மோஹித் சர்மா வீசிய 13வது ஓவரில் 6, 4, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டு அழுத்தத்தை உடைத்து 19 (8) ரன்கள் குவித்த அம்பத்தி ராயுடு சென்னை 5வது கோப்பையை வெல்வதில் கருப்பு குதிரையாக செயல்பட்டு கண்ணீர் மல்க விடை பெற்றார். குறிப்பாக மும்பை அணிக்காக 3 கோப்பைகளை வென்ற அவர் சென்னை அணியிலும் 3 சாம்பியன் பட்டங்களை வென்று ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்தார்.

வெற்றியின் ரகசியம்:
மேலும் 2019 உலக கோப்பையில் விளையாடுவதற்கு தகுதியான செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் முப்பரிமாண வீரர் என்ற கண்ணோட்டத்துடன் கழற்றி விடப்பட்ட ராயுடுவின் சர்வதேச கேரியர் வன்மத்தால் வீழ்த்தப்பட்டாலும் 6 கோப்பைகளை வென்று ஜாம்பவானாகவே ஓய்வு பெற்றுள்ளார். அப்படிப்பட்ட அவரை பாராட்டும் வகையில் கேப்டன் தோனி அவரது கையில் கோப்பையை கொடுத்து அழகு பார்த்தது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

ambathirayudu1

இந்நிலையில் இந்த தொடரில் பாண்டியா தலைமையில் சுப்மன் கில், ஷமி போன்ற நல்ல பார்மில் இருக்கும் ஆரஞ்சு, ஊதா தொப்பிகளை வென்ற வீரர்களை கொண்ட குஜராத் மட்டும் ஃபைனலுக்கு வரக்கூடாது என்று நினைத்ததாக ராயுடு கூறியுள்ளார். மேலும் ஐபிஎல் வரலாற்றின் பரம எதிரிகளாகவும் இரு துருவங்களாகவும் கருதப்படும் மும்பை – சென்னை ஆகிய 2 அணிகளிலுமே விளையாடி தலா 3 கோப்பைகளை வென்றுள்ள அவர் ஆரஞ்சு, ஊதா தொப்பிகளை வெல்லும் வீரர்களை விட வெற்றியில் பங்காற்றும் வீரர்களை கொண்டிருப்பதே அந்த 2 அணிகளின் வெற்றிக்கான ரகசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த தொடரில் மும்பைக்கு எதிராக சேப்பாக்கத்தில் வென்ற போட்டி தான் எங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது. அதன் பின் கொல்கத்தாவிடம் தோற்றாலும் டெல்லிக்கு எதிரான கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற போட்டியில் நாங்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வென்றோம்”

IPL 2018 - SRH vs CSK

“அந்த போட்டியில்அடிப்படைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து வென்றதால் இந்த சீசனில் கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் ஏற்பட்டது. இருப்பினும் குஜராத்தை நினைத்து நாங்கள் பயந்தோம். ஏனெனில் இந்த சீசனில் அவர்கள் விளையாடிய விதத்தால் ஃபைனலுக்கு வரக்கூடாது என்று நினைத்தோம். குறிப்பாக அவர்களுடைய பவுலிங் நம்ப முடியாத தரத்தில் இருந்தது. மேலும் மும்பை – சென்னை ஆகிய 2 அணிகளில் விளையாடியதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க:WTC Final : இந்தியாவை வீழ்த்தி கப் ஜெயிக்கனும்னா நீங்க அவரை தாண்டி ஆகனும். ஆஸி அணியை எச்சரித்த – ஆரோன் பின்ச்

“அந்த 2 அணிகளில் எப்போதுமே தங்களுக்காக விளையாடும் வீரர்களை விட அணிக்காக விளையாடும் வீரர்களே இருப்பார்கள். குறிப்பாக மும்பை கோப்பைகளை வென்ற சீசன்களை நீங்கள் பார்க்கும் போது அதில் ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பிகளை வென்ற வீரர்கள் இருக்க மாட்டார்கள். அதே போலவே சென்னை அணியிலும் 2018 மட்டுமல்லாமல் ஆரம்பகாலம் முதலே களமிறங்கும் அனைத்து வீரர்களும் சொந்த சாதனைகளைத் தாண்டி அணிக்காக வெல்லும் முனைப்புடன் செயல்பட்டனர். அது தான் அந்த 2 அணிகளும் வெற்றிகரமாக திகழ்வதற்கான கலாச்சாரமாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement