WTC Final : இந்தியாவை வீழ்த்தி கப் ஜெயிக்கனும்னா நீங்க அவரை தாண்டி ஆகனும். ஆஸி அணியை எச்சரித்த – ஆரோன் பின்ச்

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது வரும் ஜூன் ஏழாம் தேதி முதல் 11-ம் தேதி வரை லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கோப்பையை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

IND vs AUS

- Advertisement -

இந்நிலையில் தற்போது இவ்விரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தற்போது இங்கிலாந்து பயணித்து அங்கே பயிற்சியை மேற்கொண்டு வரும் இவ்வேளையில் இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது என்பது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ஆரோன் பின்ச் இந்திய அணியை ஆஸ்திரேலிய வீழ்த்த வேண்டுமெனில் விராட் கோலியை விரைவில் ஆட்டமிழக்க வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Kohli 1

இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் விராட் கோலியையும், ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்தையும் விரைவில் வீழ்த்தினால் மட்டுமே எந்த அணியாலும் வெற்றி பெற முடியும். ஏனெனில் அவர்கள் இருவருமே நான்காவது இடத்தில் இறங்கி பேட்டிங் செய்கின்றனர். ஆனால் அவர்களை சற்று முன்கூட்டியே வரவைத்து அவர்களை ஆட்டமிழக்க வைக்க வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் அந்த அளவுக்கு இருவருமே ஆபத்தான வீரர்கள். அதிலும் குறிப்பாக விராட் கோலியை விரைவில் வீழ்த்தவில்லை எனில் அவர் தற்போது இருக்கும் பார்மிற்கு நிச்சயம் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார். கடந்த மூன்று தொடர்களாகவே ஆஸ்திரேலியா அணியை விட இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

இதையும் படிங்க : WTC Final : வேற வழி இல்ல, ஃபைனலில் அஷ்வினுக்கு சான்ஸ் கிடைப்பது கஷ்டம் தான் – டேனியல் வெட்டோரி கூறும் காரணம் என்ன

இறுதிப்போட்டியை நாம் எந்த இடத்தில் விளையாடுகிறோம் என்பது பெரிய விஷயமாக இருக்காது. நிச்சயம் இந்த போட்டி இரு அணிகளுக்குமே கடுமையான போட்டியாக இருக்கும் என ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement