ஒரு போட்டியில சொதப்பிட்டாங்கனு அவங்கள டீம்ல இருந்து தூக்குறது சரியில்ல – சவுரவ் கங்குலி ஆதரவு

Ganguly
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணி மீது விமர்சனங்களும் எழுந்துள்ளன. அதோடு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அணி தேர்வில் தவறு செய்து விட்டார் என்றும், பயிற்சியாளர் டிராவிடும் சரியான முடிவுகளை எடுப்பதில்லை என்றும் பல்வேறு விமர்சனங்கள் இந்திய அணியின் மீது எழுந்துள்ளன.

Shardul-Thakur

- Advertisement -

அதோடு இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை நடைபெறவுள்ள வேளையில் ரோகித் சர்மா மற்றும் டிராவிட் ஆகியோரது கூட்டணி இனியும் அவசியமா? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் மற்றும் டிராவிட் ஆகியோரை அனைவரும் விமர்சித்து வரும் வேளையில் இந்திய அணியில் என்ன மாதிரியான மாற்றத்தை கொண்டு வரலாம் என்பது குறித்து பிசிசிஐ-யின் முன்னாள் தலைவரான கங்குலி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Pujara

இந்திய அணி ஒரு போட்டியில் தோல்வியடைந்ததற்காக நாம் எந்த ஒரு முடிவையும் இப்போது எடுக்க தேவையில்லை. இந்திய அணியில் உள்ள வீரர்களுக்கு திறமையில் எந்த ஒரு குறைபாடும் இல்லை. ஆனால் அது சரியான வேளையில் வெளிப்படவில்லை அதுவே உண்மை. ஒரு போட்டியில் சொதப்புவதற்காக விராட் கோலி, புஜாரா போன்ற வீரர்களை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

- Advertisement -

ஆனால் அணிக்குள் வர இருக்கும் திறமையான இளம் வீரர்களை தற்போது நாம் அடையாளம் காண வேண்டும். ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களை விட உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ரன்களை குவிக்கும் வீரர்களை டெஸ்ட் அணிக்குள் கொண்டு வந்து அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும். அந்த வகையில் ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ரஜத் பட்டிதார் போன்ற வீரர்கள் உள்ளூர் தொடர்களில் அதிக அளவில் ரன்களை குவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : Ashes 2023 : அனல் தெறிக்கப் போகும் ஆஷஸ் – கௌரவத்தை வெல்லப்போவது யார்? எந்த சேனலில் பார்க்கலாம் – புள்ளிவிவரம் இதோ

அவர்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்க்க நான் ஆசைப்படுகிறேன். அதேபோன்று ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பினால் அது அணிக்கு மேலும் பலத்தை தரும் என சவுரவ் கங்குலி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement