பும்ராவும் இல்ல. சுப்மன் கில்லும் இல்ல. இந்திய அணி உலகக்கோப்பையை ஜெயிக்க இவங்க 2 பேர் தான் முக்கியம் – கங்குலி கருத்து

Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக ஆசிய கோப்பை மற்றும் 50 உலகக் கோப்பை தொடர் என மிகப்பெரிய தொடர்களில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆசிய கோப்பை தொடரில் விளையாட தயாராகி வருகிறது. இந்த ஆசிய கோப்பை தொடரானது ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறயிருக்கிறது.

அந்த வகையில் இந்த ஆசிய கோப்பை தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. கடந்த 2013-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி இதுவரை எந்த ஒரு ஐசிசி கோப்பையும் கைப்பற்றாத நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை வென்று இந்திய அணி அந்த தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பி.சி.சி.ஐ-யின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி இந்த ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பும்ரா மற்றும் சுப்மன் கில் ஆகியோரை தாண்டி ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரே கீ பிளேயராக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள சௌரவ் கங்குலி கூறுகையில் : எதிர்வரும் ஆசிய கோப்பை மற்றும் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே இந்திய அணியில் முக்கிய பங்கினை வகிப்பார்கள். ஏனெனில் விராட் கோலி தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்,

- Advertisement -

அவரது திறன் குறித்து எந்தவித சந்தேகமும் இல்லை. அவர் இந்திய அணியின் பலம் மிகுந்த வீரர். அதேபோன்று ரோகித் சர்மாவும் இந்திய அணியின் கீ பிளேயர் தான். ஏனெனில் கடைசியாக நடைபெற்ற 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பையில் 5 சதங்களை விளாசிய அவர் 600-க்கும் மேற்பட்ட ரன்களை விளாசியுள்ளார்.

இதையும் படிங்க : வீடியோ : வெறும் 1 ஃபோருடன் சதம் விளாசிய மார்ட்டின் கப்டில் அரிதான சாதனை – திரிபாங்கோ அணி வரலாற்று சாதனை

இதன்காரணமாக அவர்கள் இருவருமே எதிர்வரும் ஆசிய கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கீ பிளேயர்களாக இருப்பார்கள் என கங்குலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement