வெறும் 1 ஃபோருடன் சதம் விளாசிய மார்ட்டின் கப்டில் அரிதான சாதனை – திரிபாங்கோ அணி வரலாற்று சாதனை

Martin Guptill
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்று வரும் 2023 கரீபியன் பிரீமியர் லீக் 20 கிரிக்கெட் தொடரில் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெற்ற 13வது லீக் போட்டியில் த்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. பார்படாஸ் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற பார்படாஸ் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய த்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 194/5 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு நியூசிலாந்தை சேர்ந்த நட்சத்திர தொடக்க வீரர் மார்ட்டின் கப்டில் நீண்ட நாட்கள் கழித்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

மறுபுறம் தேயல் 27, நிக்கோல்ச் பூரான் 6, ரசல் 5 ரன்களில் அவுட்டானாலும் கேப்டன் பொல்லார்ட் தனது பங்கிற்கு 1 பவுண்டரி 4 சிக்சருடன் 46 (32) ரன்கள் எடுத்து த்ரிபங்கோ அணியை வலுப்படுத்தி ஆட்டமிழந்தார். ஆனால் கடைசி வரை அவுட்டாகாமல் பார்படாஸ் பவுலர்களை வெளுத்து வாங்கிய மார்ட்டின் கடைசி ஓவரில் சிங்கிளுடன் சதமடித்து 100* (58) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அந்த வகையில் ரசிகர்களை ரன் மழையில் நனைத்த அவர் வெறும் ஒரே 1 பவுண்டரி மட்டும் அடித்து 9 சிக்ஸர்களை தெறிக்க விட்டு சதமடித்தார்.

- Advertisement -

சாதனை வெற்றி:
இதன் வாயிலாக 2014இல் நமீபியாவுக்கு எதிராக நெதர்லாந்தின் நிக்கி வான் டென் பெர்க் (1 பவுண்டரி 12 சிக்ஸர்), 2018 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்துக்கு எதிராக கிறிஸ் கெயில் (1 பவுண்டரி 11 சிக்ஸர்) பஞ்சாப்புக்காக கிறிஸ் கெயில், 2021இல் கேண்டர்பரிக்கு எதிராக வில் எங் (1 பவுண்டரி 10 சிக்ஸர்) ஆகியோரை தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் வெறும் 1 பவுண்டரியுடன் சதமடித்த 4வது வீரர் என்ற அரிதான சாதனையையும் மார்ட்டின் கப்தில் படைத்துள்ளார். அப்படி அவரிடம் அடி வாங்கிய பார்படாஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை தொடர்ந்து 195 ரன்களை துரத்திய பார்படாஸ் அணிக்கு ரஹீம் கார்ன்வால், கெய்ல் மேயர்ஸ் ஆகிய தொடக்க வீரர்கள் ரசல் வீசிய முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அவர்களை விட அடுத்ததாக வந்த பிராட் எவான்ஸ் 5, அலிக் அதனேஷ் 2, ஜேசன் ஹோல்டர் 14, கேப்டன் போவல் 10 என முக்கிய வீரர்கள் அனைவரும் ட்ரிபாங்கோ அணியின் அசத்தலான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் 12.1 ஓவரிலேயே பார்படாஸ் அணியை வெறும் 61 ரன்களுக்கு சுருட்டி 133 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற த்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் சார்பில் அதிகபட்சமாக வக்கார் சலாம்கேல் 4 விக்கெட்டுகளும் ஆண்ட்ரே ரசல் 3 விக்கெட்டுகளும் அகில் ஹொசைன் 2 விக்கெட்டுகளும் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினர். இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி சதமடித்து அசத்திய மார்ட்டின் கப்தில் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையும் படிங்க: விராட் கோலி என்னை பாராட்டுறது பெரிய விஷயம், 2019ல அவர்கிட்ட அதை கத்துக்கிட்டு தான் முன்னேறிருக்கேன் – பாபர் அசாம் நெகிழ்ச்சி பேட்டி

அதை விட இந்த வெற்றியால் கடந்த 2013 முதல் நடைபெற்று 10 வருட வரலாற்றை கொண்ட கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற சாதனையை த்ரிபாங்கோ படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. 133 ரன்கள் : த்ரிபாங்கோ – பார்படாஸ்க்கு எதிராக, 2023*
2. 120 ரன்கள் : ஜமைக்கா தள்ளவாஸ் – செயின்ட் லூசியாவுக்கு எதிராக, 2021
3. 119 ரன்கள் : செயின்ட் நெவிஸ் – ஜமைக்கா தள்ளவாஸ்க்கு எதிராக, 2015

Advertisement