விராட் கோலி என்னை பாராட்டுறது பெரிய விஷயம், 2019ல அவர்கிட்ட அதை கத்துக்கிட்டு தான் முன்னேறிருக்கேன் – பாபர் அசாம் நெகிழ்ச்சி பேட்டி

Babar Azam
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கியுள்ள 2023 ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் நேபாளத்தை தோற்கடித்த பாகிஸ்தானை வரும் செப்டம்பர் 2ஆம் தேதி தங்களுடைய முதல் போட்டியில் இந்தியா சந்திக்கிறது. ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் இந்த போட்டியில் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது. அதற்கு நிகராக இரு நாடுகளைச் சேர்ந்த நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் பாபர் அசாம் ஆகியோரில் சிறப்பாக செயல்பட்டு தங்களது நாட்டுக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

அப்படி அந்த 2 வீரர்கள் மீது அனைவருமே எதிர்பார்ப்பும் ஒப்பீடுகளையும் வைத்திருந்தாலும் அவர்கள் இருவருமே நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லலாம். குறிப்பாக 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக விராட் கோலியை ஏராளமானவர்கள் விமர்சித்த போது “இதுவும் கடந்து போகும் பொறுமையாக காத்திருங்கள்” என்று பாபர் அசாம் ட்வீட் போட்டு கொடுத்த மெகா ஆதரவை எப்போதுமே மறக்க முடியாது. அதே போல 2022 ஆசிய கோப்பைக்கு முன்பாக பாபர் அசாமை நேரில் சந்தித்து அதற்காக விராட் கோலி கை கொடுத்து நன்றி தெரிவித்ததும் அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

- Advertisement -

பாபர் நெகிழ்ச்சி:
அத்துடன் தற்சமயத்தில் பாபர் அசாம் உலக அளவில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தும் டாப் பேட்ஸ்மேன் என்று சமீபத்தில் விராட் கோலி ஐசிசி இணையத்தில் வெளிப்படையாக பாராட்டியிருந்தார். இந்நிலையில் விராட் கோலி போன்ற ஒருவர் தம்மை பாராட்டுவது மிகப்பெரிய விஷயம் என்று நன்றி தெரிவிக்கும் பாபர் அசாம் 2019 உலகக்கோப்பையில் முதல் முறையாக அவரை சந்தித்த போதிலிருந்தே நிறையவற்றை கற்று முன்னேறி வருவதாக வெளிப்படையாக பேசியுள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “தம்முடைய கேரியர் மற்றும் பவரின் உச்சத்திலிருந்த விராட் கோலியை 2019 உலகக் கோப்பையில் பார்த்த போதிலிருந்தே இப்போதும் அவர் உச்சத்தில் தான் இருக்கிறார். அந்த சமயத்தில் சில நான் கேள்விகளை கேட்ட போது அதற்கு அவர் தெளிவான விளக்கங்களை கொடுத்தார். அதன் வாயிலாக நான் நிறைவற்றை கற்றுள்ளேன். எனவே என்னைப் பற்றி அவரை போன்ற ஒருவர் அப்படி தெரிவிக்கும் போது நல்ல உணர்வை பெறுகிறேன்”

- Advertisement -

இதையும் படிங்க: இருதரப்பு தொடர்ல புலியாக பாயும் இந்தியா ஐசிசி நாக் அவுட்ல இன்னும் பூனையா தான் இருக்காங்க – முன்னாள் பாக் வீரர் ஓப்பன்டாக்

“அதிலும் விராட் கோலி போன்ற ஒருவர் பாராட்டுவது பெருமைக்குரிய அம்சமாகும். அவர் என்னை பற்றி சொல்லியது இன்னும் எனக்குள் அதிக தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது” என்று கூறினார். அந்த வகையில் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவருமே தங்கள் மீது ஒருவருக்கொருவர் நல்ல மதிப்பையும் நட்பையும் வைத்திருக்கிறார்கள். ஆனாலும் இரு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் தான் அவர் பெரியவர் இவர் பெரியவர் என்று சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வது தொடர் கதையாகி வருகிறது.

Advertisement