நம்மகிட்ட நம்பர் 4 இடத்துக்கு ஆள் இல்லைன்னு யார் சொன்னது? இந்தாங்க லிஸ்ட் – குழப்பங்களை தீர்த்த கங்குலி

- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இருப்பினும் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய முக்கிய வீரர்கள் இன்னும் காயத்திலிருந்து குணமடையாமல் இருப்பது குழப்பத்தையும் உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக கருதப்படும் ஆசிய கோப்பை தொடருக்கான அணியை அறிவிப்பதிலும் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.

IND vs PAK World Cup

- Advertisement -

அதிலும் குறிப்பாக மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லாத பிரச்சனையும் நம்பர் 4வது இடத்தில் விளையாடப் போவது யார் என்ற குழப்பமும் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியில் உச்சகட்டமாக காணப்படுகிறது. ஏனெனில் 2019இல் ராயுடுவை கழற்றி விட்டு விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரை சோதனை செய்ததில் யாருமே காயம் மற்றும் சுமாரான ஃபார்ம் காரணமாக 4வது இடத்தில் நிலையாக விளையாடவில்லை.

கங்குலியின் ஆலோசனைகள்:
இருப்பினும் ஒரு வழியாக கடந்த வருடம் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர் 4வது இடத்தில் விளையாடுவதற்கு தகுதியானவராக அசத்திய போதிலும் தற்போது காயத்தை சந்தித்துள்ளது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த 2 பிரச்சனைக்கும் ஒரே தீர்வாக வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் அறிமுகமாகி 20 வயதிலேயே முதிர்ச்சியான செயல்பாடுகளை வெளிப்படுத்திய திலக் வர்மாவை தேர்வு செய்யலாம் என நிறைய கருத்துக்கள் காணப்படுகின்றன.

Tilak-Varma

இந்நிலையில் நம்பர் 4வது இடத்தில் விளையாடுவதற்கு திலக் வர்மா, ஜெய்ஸ்வால் போன்ற நிறைய வீரர்கள் நிறைந்து கிடப்பதாக தெரிவிக்கும் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி அதில் யார் சிறந்தவர் நமக்கு யார் தேவை என்பதை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் தீர்மானிக்க வேண்டுமென கூறியுள்ளார். மேலும் போட்டி மிகுந்த இந்த தொடரில் செமி ஃபைனலில் விளையாடப் போகும் அணிகளை கணிப்பது கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நம்மிடம் நம்பர் 4வது இடத்தில் விளையாடுவதற்கு வீரர்கள் இல்லை என்று செய்தித்தாளில் பார்த்தேன். ஆனால் நம்மிடம் 4வது இடத்தில் விளையாடுவதற்கு ஆள் இல்லை என்று யார் சொன்னது? நம்மிடம் நிறைய பேர் இருக்கிறார்கள். குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற அனைவருமே அனைத்து இடங்களிலும் விளையாடும் அனுபவத்தை கொண்டுள்ளவர்கள். மேலும் அனைத்து நேரங்களிலும் நமக்கு அனுபவமும் முக்கியம் கிடையாது. அதனால் திலக் வர்மா, இசான் கிசான், ஜெய்ஸ்வால் போன்ற பயமின்றி விளையாடும் வீரர்களும் தேர்வு செய்வதற்காக தேர்வு குழுவினர் முன் தயாராக இருக்கின்றனர்”

Ganguly

“அதில் குறிப்பாக இடது கை பேட்ஸ்மேனாக இருக்கும் திலக் வர்மா நல்ல தேர்வாக இருப்பார். நல்ல திறமையான இளம் வீரரான அவர் இதுவரை பெரிய அளவில் அனுபவத்தைக் கொண்டிருக்கவில்லை என்பது முக்கியமல்ல. அதே போல ஜெயிஸ்வால் டாப் ஆர்டரில் விளையாடும் தகுதியை கொண்டவர். எனவே ராகுல் டிராவிட், ரோகித் சர்மா மற்றும் தேர்வுக்குழுவினருக்கு தேர்வு செய்வதற்காக நிறைய வீரர்கள் தயாராக இருக்கின்றனர். அதில் அவர்கள் தான் தங்களுக்கு தேவையான தகுதியானவர்களை வைத்து சிறந்த 11 பேர் அணியை தேர்ந்தெடுக்க வேண்டும்”

இதையும் படிங்க:IND vs IRE : முக்கிய நேரத்தில் வந்து நூலிழையில் முடிவை தீர்மானித்த மழை – த்ரில் வெற்றியை பெற்றது யார்? விவரம் இதோ

“மேலும் இந்த உலகக் கோப்பையில் டாப் அணிகளை கணிப்பது கடினமாகும். இருப்பினும் ஆஸ்திரேலியா எப்படியும் வந்து விடுவார்கள். இங்கிலாந்து வலுவான அணியை கொண்டுள்ளது. அதே போல இந்தியா மற்றும் பாகிஸ்தானை குறைத்து மதிப்பிட முடியாது. அதற்கு நிகராக நியூஸிலாந்தும் இது போன்ற பெரிய தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் அணியாகும்” என்று கூறினார்.

Advertisement