அவரைப்பாத்து கத்துக்கோங்க விராட் கோலியை புகழ்ந்து ரோஹித் சர்மாவை விமர்சித்த – சவுரவ் கங்குலி

Ganguly
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியானது தற்போது ஜூன் 7-ஆம் தேதி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 2013-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி ஐசிசி கோப்பை தொடரினை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

Rohit

- Advertisement -

இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் மூன்று வகையான போட்டிகளிலும் விராட் கோலி கேப்டனாக செயல்பட்ட போது பல்வேறு ஐசிசி தொடர்களை தவறவிட்டது. விராட் கோலி நல்ல ஃபார்மில் இருந்தும் இந்திய அணியின் வீரர்கள் நல்ல நிலையில் இருந்தும் கோப்பைகளை தவறவிட்டது அவர் கேப்டன் பதவியில் இருந்து வெளியேற முக்கிய காரணமாக அமைந்தது. அதே வேளையில் அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பு ஏற்ற ரோஹித் சர்மாவும் இதுவரை ஐசிசி கோப்பையை கைப்பற்றாமல் இருந்து வருகிறார்.

மேலும் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் விராட் கோலி கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அப்போது பிசிசிஐயின் தலைவராக இருந்த கங்குலி கொடுத்த அழுத்தம் காரணமாக விராட் கோலி 3 வகையான கிரிக்கெட்டில் இருந்தும் கேப்டன் பதவியை இழந்தார். இதன் காரணமாக கங்குலிக்கும் விராட் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.

IND

அதோடு விராட் கோலியும் சமூக வலைதளத்தில் கங்குலியை பின்தொடர்வதை நிறுத்தினார். இந்நிலையில் தற்போது முதல் முறையாக ரோகித் சர்மாவை விளாசி விராட் கோலிக்கு ஆதரவளிக்கும் விதமாக கங்குலி ஒரு மறைமுக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான கேப்டனாக திகழ்ந்து வந்தார். அதிலும் குறிப்பாக அவரது தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பான வெற்றிகளை குவித்தது, அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமோ அவ்வாறு பயன்படுத்தினார்.

- Advertisement -

அதேபோல் நீங்களும் பயன்படுத்த வேண்டும் என்று விராட் கோலி பாராட்டி உள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான பேட்டிங் சாதனைகளை வைத்துள்ளார். அதுமட்டும் இன்றி எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும் அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

இதையும் படிங்க : WTC Final : முழு மூச்சுடன் போராடிய சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் – திணறும் இந்தியா ஃபாலோ ஆனை தவிர்க்க செய்ய வேண்டியது என்ன?

அந்த வகையில் நீங்களும் செயல்பட வேண்டும் என ரோகித்தை அவர் சரமாரியாக விளாசியுள்ளார். எப்பொழுதுமே விராட் கோலிக்கு எதிராக நேர்மறையான கருத்துக்களை பகிர்ந்து வரும் கங்குலி தற்போது விராட் கோலி ஆதரித்து தெரிவித்திருந்த கருத்துக்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஆதரவினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement