என்னது ரிஷப் பண்ட் ரெடியாகி வர 2 வருஷம் ஆகுமா? முக்கிய தகவலை வெளியிட்ட – சவுரவ் கங்குலி

Ganguly-and-Pant
Advertisement

இந்திய அணியின் முன்னணி இளம் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதன் காரணமாக தற்போது சிகிச்சையில் இருந்து வீடு திரும்பியுள்ள ரிஷப் பண்ட் காயம் குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப ஓராண்டு ஆகும் என்பதனால் ஐபிஎல் தொடர் மற்றும் இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 உலகக் கோப்பை தொடர் என முக்கியமான தொடர்களை தவறவிட இருக்கிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

Rishabh Pant

இந்நிலையில் பிசிசிஐ-யின் முன்னாள் தலைவரும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் மேனேஜ்மென்ட் அதிகாரியாக இருக்கும் கங்குலி தற்போது வெளியிட்டுள்ள ஒரு தகவல் படி ரிஷப் பண்ட் குணமடைந்து வர இரண்டு வருடங்கள் வரை ஆகலாம் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

- Advertisement -

அதன்படி இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தற்போது செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சவுரவ் கங்குலி ரிஷப் பண்டின் இடத்தை நிரப்புவது கடினமான ஒன்று. அவரது இடத்திற்கு மாற்றுவீரரை நாங்கள் தேர்வு செய்யப்போவது நிச்சயம் எங்களுக்கு சவாலான காரியமாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ரிஷப் பண்ட் விபத்து நடைபெற்ற பிறகு இரண்டு முறை பேசியதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் இரண்டு முறை ரிஷப் பண்டிடம் விபத்திற்கு பிறகு 2 முறை பேசியுள்ளேன். தற்போது அவர் ஒரு கடினமான நாட்களை எதிர்கொண்டு வருகிறார்.

- Advertisement -

அவருடைய அறுவை சிகிச்சைகள் நடைபெற்று முடிந்தாலும் அவரது காயம் குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவதற்கு இரண்டு ஆண்டுகள் வரை தேவைப்படலாம். நிச்சயம் அவர் இந்திய அணிக்காக மீண்டு வந்து விளையாட வேண்டும் என்பதே தனது விருப்பம் என கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : உங்க சாதனையை நீங்க தான் மெச்சுக்கணும், வரலாற்றில் யாரும் பேசமாட்டாங்க – விராட் கோலிக்கு மான்டி பனேசர் பதில்

ஏற்கனவே வெளியான தகவலில் ரிஷப் பண்ட் ஒரு ஆண்டு மட்டும் கிரிக்கெட் விளையாட மாட்டார் என்று நினைத்த வேளையில் தற்போது கங்குலி ரிஷப் பண்டிடம் பேசிய பிறகு வெளியிட்டுள்ள இந்த தகவலில் தற்போது இரண்டு ஆண்டுகள் வரை அவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட முடியாது என்று கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement