அவர் இந்திய அணிக்காக விளையாட முழுசா ரெடி ஆயிட்டாரு. சீக்கிரம் அவரை டீம்ல எடுங்க – கங்குலி கருத்து

Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது ஏகப்பட்ட வீரர்கள் தங்களது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் ப்ளேயிங் லெவனில் இடம்பெறும் வீரர்களுக்கான போட்டி கடுமையாக நிலவி வருகிறது. ஏனெனில் தற்போது உள்ள இந்திய வீரர்களை வைத்து இரண்டு அணிகளை உருவாக்கும் அளவிற்கு நம்மிடம் பலம் இருப்பதினால் ஒரு வீரர் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க வேண்டுமெனில் மற்றொரு வீரருடன் போட்டி போடும் ஒரு ஆரோக்கியமான நிலை இருந்து வருகிறது.

IND-Team

- Advertisement -

அதேபோன்று பல்வேறு இளம் வீரர்களும் தங்களது அசத்தலான திறனை வெளிக்காட்டி வருதாலும் அவர்களுக்கு இடையேயும் போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே துவக்க வீரருக்கான இடத்தில் பலஇளம் வீரர்கள் போட்டி போட்டு வரும் வேளையில் தற்போது தான் இழந்த இடத்தை பிடிப்பதற்காக ப்ரதிவி ஷாவும் மும்முரம் காட்டி வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான பிரித்வி ஷா அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியிருந்தார்.

அப்போதைய பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூட : சச்சின், லாரா, சேவாக் ஆகிய 3 பேர் சேர்ந்த கலவைதான் பிரத்வி ஷா என்றும் புகழாரம் சூட்டியிருந்தார். ஆனால் அவரது பிட்னஸ் பிரச்சனையால் ஏற்பட்ட காயம் காரணமாக வாய்ப்பை இழந்த அவர் தொடர்ச்சியாக அணியில் இடம் பெறாமல் போக அந்த நேரத்தில் இந்திய அணியில் இணைந்த சுப்மன் கில், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்கள் டாப் ஆர்டரில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அணியில் விளையாடி வருகின்றனர்.

Shaw

அதேவேளையில் தனது வாய்ப்பை இழந்த ப்ரித்வி ஷா உள்ளூர் போட்டியில் கடுமையாக போராடி வந்தாலும் இன்னும் இந்திய அணிக்கு திரும்பாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் ப்ரித்வி ஷா நிச்சயம் விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்றும் அவரை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்றும் முன்னாள் பிசிசிஐ தலைவரான கங்குலி தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

ப்ரித்வி ஷா தற்போது இந்திய அணிக்காக விளையாட முழுவதுமாக தயாராகி விட்டார். ஆனால் அவருக்கு அணியில் காலியாக இருக்கும் இடத்தை பொறுத்துதான் வாய்ப்பு கிடைப்பதும், கிடைக்காமல் போவதும் தெரியும். ரோஹித் சர்மா மற்றும் தேர்வாளர்கள் ப்ரிதிவி ஷாவை நிச்சயம் கவனித்துக் கொண்டிருப்பார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அந்த வகையில் ப்ரிதிவி ஷா இந்தியாவுக்காக விளையாட ரெடி என்றும் ரோகித் விரைவில் அவரை அணியில் தேர்வு செய்து விளையாட வைக்க வேண்டும் என்றும் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : IPL 2023 : ரிஷப் பண்டிற்கு பதிலாக டெல்லி அணியில் இணையப்போகும் வீரர் யார் தெரியுமா? – வெளியான தகவல்

ஏற்கனவே உள்ளூர் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் ப்ரித்வி ஷாவை இந்திய அணியில் விளையாட வைக்க வேண்டும் என கம்பீர், முரளிவிஜய் ஆகிய முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த வேளையில் கங்குலியும் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement