IPL 2023 : ரிஷப் பண்டிற்கு பதிலாக டெல்லி அணியில் இணையப்போகும் வீரர் யார் தெரியுமா? – வெளியான தகவல்

Rishabh Pant
- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நாளை மார்ச் 31-ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்த ஆண்டிற்கான முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த முதலாவது போட்டியே ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பினை பெற்றுள்ளது.

DC vs PBKS 2

- Advertisement -

தற்போது ஐ பி எல் போட்டிகளுக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு சில அணிகளில் காயம் அடைந்த வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களையும் தேர்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான டெல்லி அணியில் இருந்து கேப்டன் ரிஷப் பண்ட் வெளியேறியது அந்த அணிக்கு துரதிஷ்டவசமானது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் அடுத்த ஒரு ஆண்டுக்கு எந்தவித போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என்பதனால் டெல்லி அணியில் இருந்து வெளியேறியுள்ளார். இதன் காரணமாக டெல்லி அணியின் நிர்வாகம் டேவிட் வார்னரை கேப்டனாக நியமித்துள்ளது.

Abhishek Porel

இந்நிலையில் ரிஷப் பண்டிற்கு பதிலாக மாற்றுவீரரை தேடிக் கொண்டிருக்கும் டெல்லி அணியானது தற்போது பண்டிற்கு பதிலாக சரியான மாற்றுவதை தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் 2021-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்த அபிஷேக் போரலை மாற்றுவீரராக அவர்கள் இணைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

மேற்குவங்கத்தைச் சேர்ந்த அபிஷேக் போரல் இடது கை பேட்ஸ்மேன் என்பது மட்டுமின்றி சிறப்பான விக்கெட் கீப்பரும் ஆவார். கடந்த ஆண்டு பரோடா அணிக்காக அறிமுகமாகிய அவர் 30 ரன்கள் சராசரியுடன் 695 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதாலே அவருக்கு டெல்லி அணியில் வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க : கேப்டன் ஆனது மட்டுமின்றி டி20 தரவரிசையில் ஹசரங்காவை பின்னுக்கு தள்ளிய ரஷீத் கான் – விவரம் இதோ

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement