கேப்டன் ஆனது மட்டுமின்றி டி20 தரவரிசையில் ஹசரங்காவை பின்னுக்கு தள்ளிய ரஷீத் கான் – விவரம் இதோ

rashid
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானதிலிருந்து தனது மாயாஜால பந்துவீச்சால் உலகெங்கிலும் நடைபெறும் டி20 லீக்களில் முன்னணி மேட்ச் வின்னராக திகழ்ந்து வருகிறார். கிட்டத்தட்ட ரஷித் கான் இருக்கும் அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறும் அளவிற்கு போட்டிக்கு போட்டி விக்கெட்டுகளை எடுக்கும் அவரது திறமை அனைவரது மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது.

மிகவும் குறைந்த வயதிலேயே டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ரஷித் கான் இன்னும் பல சாதனைகளை தகர்க்க காத்திருக்கிறார். ஆப்கானிஸ்தான் அணிக்காக கடந்த சில ஆண்டுகளாகவே சுழற்பந்துவீச்சில் அசத்தி வரும் அவர் தற்போது கூடுதலாக கேப்டன்சி பணியையும் செய்து வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை அவரது தலைமையிலான ஆப்கானிஸ்தான அணி தற்போது முதல் முறையாக இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனையையும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிகழ்த்தியிருந்தது.

இந்நிலையில் இந்த தொடர் முடிந்து நேற்று வெளியான டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் அவர் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். அதன்படி அண்மையில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய அணியில் ரஷீத் கானின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்ததால் ஏற்கனவே முதலிடத்தில் இருந்த இலங்கை வீரர் ஹசரங்காவை பின்னுக்கு தள்ளி தற்போது அவர் முதலிடத்தில் பிடித்துள்ளார்.

- Advertisement -

இதனை ஐசிசி-யும் தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உலகின் நம்பர் ஒன் டி20 பவுலர் என்ற ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளது. ஐசிசி வெளியிட்ட அந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகியும் வருகிறது. மேலும் இந்த தரவரிசை பட்டியலில் இலங்கை வீரர் ஹசரங்கா இரண்டாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பசல்ஹக் பருக்கி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிங்க : எத்தனை பேர் இருந்தாலும் அவங்க 2 பேர் தான் என்னுடைய ஆல் டைம் கிரேட் ஹீரோ – இந்திய, வெ.இ ஜாம்பவான்களை பாராட்டும் கிங் கோலி

மேலும் இந்த தரவரிசையில் டாப் 10 இடத்தில் இந்திய வீரர்கள் யாருமே இடம் பிடிக்கவில்லை என்பது கூடுதல் சிறப்பம்சம். இந்திய அணி சார்பாக அர்ஷ்தீப் சிங் 14-வது இடத்திலும், புவனேஸ்வர் குமார் 20-ஆவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement