எத்தனை பேர் இருந்தாலும் அவங்க 2 பேர் தான் என்னுடைய ஆல் டைம் கிரேட் ஹீரோ – இந்திய, வெ.இ ஜாம்பவான்களை பாராட்டும் கிங் கோலி

Kohli Press
- Advertisement -

இந்திய வீரர் விராட் கோலி கடந்த 2008ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2011 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் அனைத்து டாப் பந்து வீச்சாளர்களையும் மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 50 என்ற பேட்டிங் சராசரியில் 25000+ ரன்களையும் 75 சதங்களையும் விளாசி ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். அதே போல் கேப்டனாக உலகக்கோப்பை வெல்லவில்லை என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் வரலாறு காணாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டனாகவும் சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக அசத்தி வரும் அவரை கிங் கோலி என்று அனைவரும் கொண்டாடுகிறார்கள்.

பொதுவாக அவரைப் போன்ற மகத்தான விளையாட்டு வீரர்களை ஆங்கிலத்தில் கோட் அதாவது கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று ரசிகர்களும் வல்லுனர்களும் பாராட்டுவது வழக்கமாகும். அந்த வகையில் நவீன கிரிக்கெட்டின் கோட் வீரராக கொண்டாடப்படும் விராட் கோலி தம்மைப் பொறுத்த வரை இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் விவ் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் தான் தம்முடைய வரலாற்றின் ஆல் டைம் கிரேட் வீரர்கள் என்று பாராட்டியுள்ளார்.

- Advertisement -

கோலியின் ஹீரோக்கள்:
அதில் 16 வயதில் அறிமுகமாகி 90களில் உலகையே மிரட்டிய அத்தனை பவுவலர்களையும் அற்புதமாக எதிர்கொண்டு 34,357 ரன்களையும் 100 சதங்களையும் விளாசி இந்தியாவுக்கு நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்து இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்கள் கொண்டாடும் சச்சின் டெண்டுல்கர் தம்முடைய ஹீரோ என்று விராட் கோலி பாராட்டியுள்ளார். அதே போல பவுலர்கள் ராஜாங்கம் நடத்திய 70 மற்றும் 80களில் அற்புதமாக செயல்பட்டு 1975, 1979 ஆகிய உலகக் கோப்பைகளை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வென்று கொடுத்து 15000+ ரன்களை விளாசி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக அதிரடியாக விளையாடும் யுக்தியை அறிமுகப்படுத்திய ரிச்சர்ட்ஸ் தம்முடைய ஆல் டைம் கிரேட் என்று தெரிவிக்கும் விராட் கோலி இது பற்றி ஆர்சிபி இணையத்தில் பேசியது பின்வருமாறு.

“சச்சின் டெண்டுல்கர் மற்றும் சர் விவ் ரிச்சர்ட்ஸ் ஆகிய இவரது பெயர்களை எப்போதும் நான் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று தீர்மானித்துள்ளேன். சச்சின் என்னுடைய ஹீரோ. இந்த இருவரும் தங்கள் தலைமுறையில் பேட்டிங்கில் புரட்சியை ஏற்படுத்தி கிரிக்கெட்டின் இயக்கவியலை முற்றிலும் மாற்றியுள்ளனர். அதனால் தான் அவர்கள் இருவரும் பெரியவர்கள் என்று நான் உணர்கிறேன்” என்று கூறினார். அது போக தமக்கு பிடித்த இதர விளையாட்டின் நட்சத்திரங்கள் பற்றி விராட் கோலி மேலும் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ரோஜர் பெடரர் ஆகியோர் கலந்துரையாடுவதை நான் எப்போதும் கேட்க விரும்புவேன். விளையாட்டு வரலாற்றில் அந்த 2 சிறந்த விளையாட்டு வீரர்களைக் கேட்பது எல்லாவற்றையும் ஊறவைப்பதாக இருக்கும். மேலும் இளம் வயதில் நாங்கள் அந்த அட்டைகளை விளையாடுவதில் வேட்டையாடினோம். லெக்ஸ் லுகர் (முன்னாள் மல்யுத்த வீரர்) ஒருவர் தரவரிசையில் இருந்தார். ஜெயண்ட் கோன்சால்வேஸ் (மல்யுத்த வீரர்) இருந்தார். அந்த அட்டைகளுடன் விளையாடுவது வேடிக்கையாக இருந்தது. விளையாட்டு வீரர்களின் குறிப்பாக கிரிக்கெட் வீரர்களின் போஸ்டர்களும் என்னிடம் இருந்தன” என்று கூறினார்.

முன்னதாக 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த விமர்சனங்களை கடந்த ஆசிய கோப்பையில் தூளாக்கி 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்து தற்போது முழுமையான பார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலி 2023 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட தயாராகி வருகிறார்.

இதையும் படிங்க:IPL 2023 : பேட்டிங் பவர் இல்ல, அந்த டீம் பிளே ஆஃப் போனாலும் மீண்டும் கோப்பை வெல்ல வாய்ப்பில்ல – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

கடந்த 2013 முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் நிறைய ரன்களை குவித்தும் கோப்பையை வெல்ல முடியாத காரணத்தால் சந்தித்த கடுமையான விமர்சனங்களால் கடந்த வருடம் பதவி விலகி சாதாரணமாக விளையாடி வருகிறார். எனவே தற்போது ஃபார்முக்கு திரும்பியுள்ள அவர் சுதந்திர பறவையாக விளையாடி முதல் கோப்பையை வென்று கொடுப்பாரா என்பதே பெங்களூரு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Advertisement