IPL 2023 : பேட்டிங் பவர் இல்ல, அந்த டீம் பிளே ஆஃப் போனாலும் மீண்டும் கோப்பை வெல்ல வாய்ப்பில்ல – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

Chopra
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் துவங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் எதிர்கொள்கிறது. கடந்த வருடம் 7000க்கும் மேற்பட்ட கோடிகளை செலவிட்டு முதல் முறையாக தோற்றுவிக்கப்பட்ட அந்த அணி இந்தியாவின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கியது. இருப்பினும் ரசித் கான், டேவிட் மில்லர் போன்ற கணிசமான நட்சத்திர வீரர்களுடன் சுப்மன் கில் போன்ற பெரும்பாலான இளம் கிரிக்கெட் வீரர்களைக் கொண்டிருந்த அந்த அணி எங்கே கோப்பையை வெல்லப் போகிறது என்று ஆரம்பத்தில் அனைவரும் நினைத்தனர்.

- Advertisement -

ஆனால் ஆரம்பம் முதலே தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வீரர்களும் கச்சிதமாக செயல்பட்டதால் லீக் சுற்றில் தொடர்ந்து வெற்றிகளை பெற்று வந்த அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி ராஜஸ்தானை ஃபைனலில் தோற்கடித்து சொந்த ஊரான குஜராத் மண்ணில் ஒரு லட்சம் ரசிகர்களுக்கு முன்னிலையில் முதல் முயற்சியிலேயே சாம்பியன் பட்டம் வென்று அனைவரது பாராட்டுகளை அள்ளியது. பொதுவாக மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்றதும் சற்று முன்கூட்டியே களமிறங்கி முஹமது ஷமி போன்ற முக்கிய பவுலர்கள் தடுமாறும் போது பந்து வீசி மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக செயல்பட்டு வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

வாய்ப்பில்லை ராஜா:
அதே போல் சுப்மன் கில், ராகுல் திவாடியா, டேவிட் மில்லர் ஆகியோரும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியில் முக்கிய பங்காற்றினர். எனவே தற்போது இந்தியாவின் அடுத்த கேப்டனாகும் அளவுக்கு முன்னேறியுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையில் சென்னை (2010, 2011), மும்பை (2019, 2020) ஆகிய அணிகளுக்குப் பின் 3வது அணியாக கோப்பையை தக்க வைத்து சரித்திரம் படைக்க குஜராத் தயாராகி வருகிறது.

Hardik Pandya GT

இந்நிலையில் பேட்டிங்கில் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் குவிக்கும் வீரர்கள் இல்லாதது போன்ற சில குறைபாடுகளை கொண்டுள்ள குஜராத் இந்த வருடம் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றாலும் மீண்டும் கோப்பையை வெல்வதற்கு வாய்ப்பில்லை என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் கோப்பையை மீண்டும் வெல்வதை நான் பார்க்கப் போவதில்லை. ஏனெனில் அது எப்போதுமே அரிதாக நிகழக் கூடியதாகும். ஐபிஎல் வரலாற்றிலேயே அது 2 முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. தற்போதைய குஜராத் அணியும் நன்றாக உள்ளது”

- Advertisement -

“ஆனால் அவர்களால் மும்பை மற்றும் சென்னை செய்துள்ள சாதனையை பிரதிபலிக்க முடியும் என்று 100% உறுதியாக சொல்ல முடியாது. இருப்பினும் பிளே ஆஃப் சுற்றுக்குத் செல்லும் அளவுக்கு அவர்களிடம் நல்ல அணி இருக்கிறது. அதே சமயம் ஒருவேளை அவர்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனாலும் நான் ஆச்சரியப்பட போவதில்லை. ஏனெனில் அந்த அணியில் பேட்டிங் துறை கவலைக்குரிய வகையில் இருக்கிறது. பேட்டிங் துறையில் அவர்களிடம் கேன் வில்லியம்சன், சுப்மன் கில், டேவிட் மில்லர், சாய் சுதர்சன், அபினவ் மனோகர் ஆகியோர் உள்ளனர்”

Chopra

“ஹர்திக் பாண்டியாவை போல ராகுல் திவாடியா, விஜய் சங்கர் ஆகியோரையும் நீங்கள் ஆல் ரவுண்டர் வரிசையில் சேர்க்கலாம். அதே போல் விக்கெட் கீப்பராக ரித்திமான் சகா, மேத்தியூ வேட், கேஎஸ் பரத், உர்வில் படேல் ஆகியோர் இருக்கிறார்கள். இருப்பினும் குஜராத் அணியின் கவலை இங்கே தான் இருக்கிறது. ஏனெனில் அவர்களிடம் சரவெடியாக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் அளவுக்கு பவரான பேட்டிங் வரிசை இல்லை” என்று கூறினார். அவர் கூறுவது போல ஹர்திக் பாண்டியா முன்பை விட பொறுப்புடன் விளையாடினாலும் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதில்லை.

இதையும் படிங்க:BAN vs IRE : உலக சாதனை படைத்த சாகிப், அயர்லாந்தை நொறுக்கி 16 வருட சரவெடி சாதனை படைத்த லிட்டன் தாஸ்

அதே போல் சுப்மன் கில், கேன் வில்லியம்சன், ராகுல் திவாடியா ஆகிய பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுபவர்களாவே இருக்கின்றனர். எனவே டேவிட் மில்லர் தவிர்த்து அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் பஞ்சமாகவே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement