BAN vs IRE : உலக சாதனை படைத்த சாகிப், அயர்லாந்தை நொறுக்கி 16 வருட சரவெடி சாதனை படைத்த லிட்டன் தாஸ்

- Advertisement -

வங்கதேசத்துக்கு சுற்றும் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் வென்ற வங்கதேசம் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற நிலையில் இத்தொடரை வெல்ல மார்ச் 29ஆம் தேதியன்று சிட்டகாங் நகரில் நடைபெற்ற 2வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் அயர்லாந்து களமிறங்கியது. மழையால் 17 ஓவர்களாக குறைக்கப்பட்ட அப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்துக்கு தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ் மற்றும் ரோனி தாலுக்தார் ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியாக ரன்களை குவித்தனர்.

குறிப்பாக கடந்த டி20 உலக கோப்பையில் இந்தியாவை சரமாரியாக அடித்து நொறுக்கி பயத்தை காட்டிய லிட்டன் தாஸ் அதே ஃபார்மில் அயர்லாந்து பவுலர்களை சரமாரியாக வெளுத்து வாங்கினார். அதே வேகத்தில் கொஞ்சம் கூட கருணை காட்டாமல் சரவெடியாக பேட்டிங் செய்த அவர் வெறும் 18 பந்துகளில் அரை சதம் கடந்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதமடித்த வங்கதேச வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த 2007ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் முகமது அஸ்ரபுல் 20 பந்துகளில் அரை சதம்டித்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

அதிரடி வெற்றி:
அந்த வகையில் 16 வருட சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்த படைத்த அவருடன் 124 ரன்கள் பார்ட்னர்ஷிப்ப அமைத்த ரோணி தாலுக்தார் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 44 (23) ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் 10 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்ட லிட்டன் தாஸ் 83 (41) ரன்கள் விளாசி அவுட்டாக அடுத்து வந்த ஹ்ரிடோய் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 24 (13) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில் கேப்டன் சாகிப் அல் ஹசன் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 38* (24) ரன்கள் அடித்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 17 ஓவர்களில் வங்கதேசம் 202/3 ரன்கள் விளாசியது.

அதை தொடர்ந்து 203 என்ற கடினமான இலக்கை துரத்திய அயர்லாந்து வங்கதேசத்தின் தரமான பந்து வீச்சில் பால் ஸ்டிர்லிங் 0 (1), ராசி அடைர் 6 (5), டுக்கர் 5 (5), ஹரி டெக்டர் 22 (16), கெரத் டிலானி 6 (5), ஜார்ஜ் டாக்ரெல் 2 (3) என முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை சொற்ப ரன்களில் இழந்தது. அதனால் 74/7 என திணறிய அந்த அணிக்கு கடைசி நேரத்தில் குர்டீஸ் கேம்பர் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 50 (30) ரன்கள் குவித்து போராடி அவுட்டானார்.

- Advertisement -

இருப்பினும் நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் 125/9 ரன்களுக்கு அயர்லாந்தை கட்டுப்படுத்திய வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளையும் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதனால் 77 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்ற வங்கதேசம் 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றி தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

இந்த வெற்றிக்கு 38* ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய கேப்டன் சாகிப் அல் ஹசன் ஆட்டநாயகன் விருதை வென்றார். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி நல்ல ஆல் ரவுண்டராக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் இந்த போட்டியில் எடுத்த 5 விக்கெட்டுகளையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்களை எடுத்த பந்து வீச்சாளர் என்ற நியூசிலாந்தின் டிம் சௌதீ சாதனையை உடைத்துப் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சாகிப் அல் ஹசன் : 136*
2. டிம் சௌதீ : 134
3. ரசித் கான் : 129

இதையும் படிங்க:IPL 2023 : இந்த சீசனிலாவது அர்ஜுன் டெண்டுல்கருக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்குமா? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு

முன்னதாக 2018ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் இதே போல் 5 விக்கெட்டுகளை எடுத்திருந்த அவர் இந்த 5 விக்கெட்களை சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2 முறை 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் கேப்டன் என்ற உலக சாதனையும் படைத்தார்.

Advertisement