IPL 2023 : இந்த சீசனிலாவது அர்ஜுன் டெண்டுல்கருக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்குமா? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Arjun
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானும், கிரிக்கெட் போட்டிகளின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆனாலும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு குறைவில்லா புகழே இருந்து வருகிறது. அந்த அளவிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் மகத்தான ஒரு வீரராக அவர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். அதேவேளையில் அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது 23 வயதை எட்டியுள்ள வேளையில் இதுவரையில் கிரிக்கெட் போட்டிகளில் பெரிய முன்னேற்றத்தை காணவில்லை.

Arjun Tendulkar 2

- Advertisement -

குறிப்பாக ஐபிஎல் தொடர்களில் கூட அவர் இதுவரை அறிமுகமாகி விளையாடியதில்லை. கடந்த சில சீசன்களாகவே மும்பை அணியின் வலை பயிற்சி பந்துவீச்சாளராக இருந்த அவர் கடந்த ஆண்டு 30 லட்சம் ரூபாய் என்கிற அடிப்படை விலைக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டார். ஆனால் இன்றளவும் அறிமுகமாகாமல் இருக்கும் அர்ஜுன் டெண்டுல்கர் இந்த ஆண்டாவது அறிமுக வாய்ப்பை பெறுவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஏனெனில் இந்த ஆண்டு மும்பை அணியில் இடம் பெற்றிருந்த பும்ரா, ரிச்சர்ட்சன் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் அடைந்து வெளியேறிய வேளையில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டாக இருக்கும் அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஒரு வாய்ப்பினை வழங்கி பார்க்கலாம் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் கடந்த ஐபிஎல் தொடரின் போது பேசிய மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் கூறுகையில் :

arjun tendulkar

அர்ஜுன் டெண்டுல்கர் இன்னும் உயரிய மட்டத்திற்கு விளையாடும் அளவிற்கு தயாராகவில்லை. அவர் இன்னும் கொஞ்சம் கடினமான சில பகுதிகளில் பணியாற்ற வேண்டியுள்ளது என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் தனது தீவிர பயிற்சியினை முடித்துள்ள அர்ஜுன் டெண்டுல்கர் பவுலிங் செய்வது மட்டுமின்றி தனது பேட்டிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை பெற்றுள்ளார்.

- Advertisement -

கடந்த ஆண்டு ஏழு முதல்தர போட்டிகள், ஏழு லிஸ்ட் ஏ போட்டிகள், ஒன்பது டி20 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 32 விக்கெட்களையும், 250க்கும் மேற்பட்ட ரன்களையும் அடித்துள்ளதால் அவருக்கு இம்முறையாவது வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க : இனிமே கொஞ்சம் அதிரடியா ஆடுங்க. சி.எஸ்.கே வீரரை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா – விவரம் இதோ

அதே வேளையில் சச்சின் டெண்டுல்கர் அர்ஜுன் டெண்டுல்கர் முழுமையாக தயாரானால் மட்டுமே அவரை ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிப்பார் என்ற கருத்தும் இருந்து வருகிறது. இருந்தாலும் அவருக்கு ஒரு வாய்ப்பினையாவது வழங்கிட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement