இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது வரும் மார்ச் 31-ஆம் தேதி துவங்கி மே 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டிற்கான நடப்பு ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியாக ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்த முதல் போட்டியே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வேளையில் இந்த ஐபிஎல் தொடர் குறித்த தங்களது கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த முறை ஒன்பதாவது இடத்தை பிடித்த சிஎஸ்கே இம்முறை சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், சிஎஸ்கே வீரர்கள் குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் : கடந்த முறை சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமே துவக்க வீரர்கள் அதிரடியாக விளையாடாதது தான் காரணம் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறுகையில் : நாம் டி20 உலக கோப்பையை பார்த்திருக்கிறோம். அதில் பென் ஸ்டோக்ஸ் சில பந்துகளை முதலில் எதிர் கொண்டு அதன் பிறகு அதிரடியை துவங்கினார்.
அவர் தற்போது சென்னை அணியின் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் தான் இறங்க இருக்கிறார். முன் வரிசையில் அவர் இறங்கும்போது அந்த அணி சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. எனவே இம்முறை சென்னை அணியும் பென் ஸ்டோக்ஸை டாப் ஆர்டரில் தான் இறக்க யோசிப்பார்கள்.
ஆகவே தற்போது ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேவான் கான்வே ஆகியோர் அதிரடியான துவக்கத்தை வழங்க வேண்டியது அவசியம். பொதுவாகவே ருதுராஜ் மெதுவாக இன்னிங்ஸை தொடங்கி அதன்பின் தான் வேகத்தை கூட்டுவார்.
இதையும் படிங்க : IPL 2023 : இது தான் என்னோட கடைசி வேர்ல்ட் கப், ஐபிஎல் தொடரில் அசத்தி நிச்சயமா அதுல விளையாடுவேன் – இந்திய வீரர் உறுதி
ஆனால் இம்முறை அப்படி விளையாட கூடாது, அதற்கான சூழலும் இல்லை. டீசல் இன்ஜின் போல காலமெல்லாம் கடந்து செயல்படக்கூடாது. மின்சாரத்தில் இயங்குவது போல உடனே வேகத்தை கூட்ட வேண்டும். தற்போது சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ் இருப்பதால் துவக்கத்திலிருந்து அதிரடி காட்ட வேண்டும் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.