IPL 2023 : இது தான் என்னோட கடைசி வேர்ல்ட் கப், ஐபிஎல் தொடரில் அசத்தி நிச்சயமா அதுல விளையாடுவேன் – இந்திய வீரர் உறுதி

Rohit Sharma Dinesh Karthik Umesh Yadav
- Advertisement -

இந்தியாவின் கோடை காலத்தில் ரசிகர்களை மகிழ்விக்க வரும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் கோலாகலமாக துவங்குகிறது. இந்த சீசனில் கோப்பையை வெல்வதற்கு களமிறங்கும் 10 அணிகளில் விளையாடும் ஏராளமான இளம் இந்திய வீரர்கள் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பை பெறும் முயற்சியுடன் போராட உள்ளனர். அதே போல் கடந்த வருடம் பெங்களூரு அணியில் அதிரடியாக செயல்பட்டு யாருமே எதிர்பார வகையில் 3 வருடங்கள் கழித்து தேர்வான தினேஷ் கார்த்திக் போல இந்திய கேரியர் முடிந்து விட்டதாக கருதப்படும் சில மூத்த கிரிக்கெட் வீரர்களும் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்துடன் போராட உள்ளனர்.

Umesh Yadav

- Advertisement -

அந்த வகையில் மகாராஷ்டிராவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் மீண்டும் இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிக்கும் முனைப்புடன் இந்த வருட ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாட உள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி அதிரடியான வேகத்தில் பந்து வீசிய இவர் 3 வகையான இந்திய அணியிலும் வாய்ப்பு பெற்றார். குறிப்பாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் நிலையான இடத்தை பிடித்த அவர் கடந்த 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பந்து வீச்சாளராகவும் சாதனை படைத்தார்.

உறுதியான நம்பிக்கை:
ஆனால் அதன் பின் ஐபிஎல் தொடரில் ரன்களை வாரி வழங்கிய இவருக்கு 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்த பும்ரா வந்த காரணத்தால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை. போதாகுறைக்கு சிராஜ் போன்ற அடுத்த தலைமுறை பவுலர்கள் வந்து விட்டதால் டெஸ்ட் அணியிலும் நிலையான வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறுகிறார். ஆனால் 2022 ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் பல வருடங்கள் கழித்து 2022 அக்டோபர் மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் தேர்வான உமேஷ் யாதவ் மீண்டும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்தார்.

Umesh Yadhav

அந்த வகையில் 2023 ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று அவர் உறுதியாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக 35 வயதை கடந்து விட்டதால் இதுவே தன்னுடைய கடைசி உலக கோப்பை வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஆம் அது எனது மனதில் இருக்கிறது. உலகக்கோப்பை 4 வருடங்களுக்கு மட்டுமே ஒருமுறை நடைபெறும். அந்த வகையில் இந்த உலகக் கோப்பை என்னுடைய கடைசி வாய்ப்பாக இருக்கும்”

- Advertisement -

“அத்துடன் பும்ரா உலக கோப்பைக்கு முன்பாக குணமடைந்து வரலாம். இருப்பினும் இந்த ஐபிஎல் தொடரில் என்னால் முடிந்த வரை சிறப்பாக முயற்சிக்க உள்ளேன். அதை பயன்படுத்தி 2023 உலகக் கோப்பை இந்திய அணியில் நான் இடம் பிடிப்பேன் என்று நம்புகிறேன். அது 4 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறக்கூடியது. அதனால் அடுத்த 4 வருடங்கள் காத்திருக்காமல் இந்த ஐபிஎல் தொடரில் வாய்ப்பு பெற்று அதை பயன்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிக்க முயற்சிக்க உள்ளேன்”

Umesh-Yadav

“எனவே தற்போதைக்கு என்னுடைய முழு கவனமும் ஐபிஎல் தொடரில் இருக்கிறது. ஒருவேளை வெள்ளை பந்து கிரிக்கெட்டில் நான் சிறப்பாக செயல்பட்டால் நிச்சயமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அசத்த முடியும். அதன் காரணமாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஷமி மற்றும் சிராஜ் ஆகியோருடன் விளையாடுவதற்கு நானும் வாய்ப்பை பெறுவேன். எங்களுடைய அணி நன்றாக இருப்பதால் நிச்சயம் இம்முறை சிறப்பாக செயல்படுவோம் என்ற தன்னம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க:IPL 2023 : ரிட்டையர் ஆகப்போறாருனு 3 வருசமா சொல்றாங்க ஆனா அவர் தொடர்ந்து விளையாடுவாரு பாருங்க – ரோஹித் நம்பிக்கை

முன்னதாக பும்ரா காயமடைந்துள்ளதால் ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் உமேஷ் யாதவ் வாய்ப்பு பெறுவது உறுதியாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் உலக கோப்பைக்கு பும்ரா வந்து விடுவார் என்பதால் அதில் இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement