IPL 2023 : ரிட்டையர் ஆகப்போறாருனு 3 வருசமா சொல்றாங்க ஆனா அவர் தொடர்ந்து விளையாடுவாரு பாருங்க – ரோஹித் நம்பிக்கை

Rohit
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐபிஎல் தொடர் மார்ச் 31 முதல் அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்குகிறது. முன்னதாக இந்தியாவுக்கு 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று கொடுத்து ஏராளமான சாதனைகளை படைத்து சர்வதேச கிரிக்கெட்டில் ஏற்கனவே கடந்த 2019இல் விடைபெற்ற எம்எஸ் தோனி ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அந்த நிலையில் 13 சீசன்களில் 11 முறை பிளே சுற்றுக்கு அழைத்துச் சென்று 4 கோப்பைகளை வென்று கொடுத்து சென்னை அணியின் ரத்தமும் சதையும் கலந்த இதயமாக ஜொலித்து வரும் அவரை ஆரம்பகாலம் முதலே தமிழக ரசிகர்கள் தல என்ற செல்லப் பெயருடன் கொண்டாடி வருகிறார்கள்.

- Advertisement -

அவர்கள் மீது வைத்திருக்கும் பாசத்தால் தன்னுடைய ஒட்டுமொத்த கேரியரின் கடைசி போட்டி சென்னை மண்ணில் தான் நடைபெறும் என்று தோனியும் ஏற்கனவே அறிவித்துள்ளார். அந்த சூழ்நிலையில் 2019க்குப்பின் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் இந்த வருடம் சொந்த மைதானம் மற்றும் எதிரணி மைதானத்தில் விளையாடும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் வாயிலாக 4 வருடங்கள் கழித்து தன்னுடைய கோட்டையான சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது.

ரோஹித் நம்பிக்கை:
மறுபுறம் ஏற்கனவே 41 வயதை கடந்து விட்ட தோனி சமீப காலங்களாகவே அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறி வருகிறார். எனவே வயது காரணமாக ஏற்கனவே சொன்னது போல் சென்னை மண்ணில் நடைபெறும் இந்த வருட ஐபிஎல் தொடருடன் தோனி விடை பெறுவதற்கு 99% வாய்ப்புகள் இருக்கிறது என்றே சொல்லலாம். இது வரை அதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் ஏற்கனவே சொன்ன கூற்றுக்களை வைத்தும் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டும் இதுவே அவருடைய கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என்று அனைவரும் நம்புகின்றனர்.

Dhoni

இந்நிலையில் 2020 முதலே ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வு பெறுவார் என்ற செய்திகளை தொடர்ந்து கேட்டு வருவதாக ரோஹித் சர்மா கூறியுள்ளார். ஆனால் 41 வயதை கடந்தாலும் நல்ல உடல் தகுதியுடன் ஃபிட்டாக இருக்கும் தோனி இன்னும் சில சீசனங்களில் விளையாடுவதற்கு தகுதியானவர் என்பதால் இது அவருடைய கடைசி வருடமாக இருக்காது என்று நம்புவதாக ரோகித் சர்மா வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இது அவருடைய கடைசி வருடமா என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் கடந்த 2 – 3 வருடங்களாக நான் இந்த செய்தியை தான் கேட்டு வருகிறேன். இருப்பினும் தற்போதும் நல்ல ஃபிட்டாக இருக்கும் அவர் தொடர்ந்து விளையாட முடிவெடுப்பார் என்று நினைக்கிறேன். குறிப்பாக அவர் இன்னும் சில சீசன்கள் விளையாடுவதற்கு தேவையான முழு உடல் தகுதியுடன் இருக்கிறார்” என்று கூறினார்.

CskvsMi

முன்னதாக இந்தத் தொடருடன் தோனி விடை பெறுவார் என்று தாம் நினைக்கவில்லை என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சனும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு. “இது தான் தோனியின் கடைசி சீசன் என்று நான் கேள்விப்பட்டேன். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. என்னை பொறுத்த வரை எம்எஸ் தோனி தாராளமாக அடுத்த 3 – 4 வருடங்கள் தொடர்ந்து விளையாடலாம்.

- Advertisement -

தற்போதும் ஃபிட்டாக இருக்கும் அவர் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்வதில் அசத்துகிறார்” என்று கூறினார். அத்துடன் இதற்கு முன் இவ்வளவு கட்டுமஸ்தான உடம்புடன் கூடிய தோனியை பார்த்ததில்லை என பிரபல தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: எங்க காலத்துல சச்சினை விட அவர் தான் ரொம்ப டேஞ்சரான பேட்ஸ்மேன், இந்தியாவை வீழ்த்த அவங்கள சாய்க்கணும் – அப்துல் ரசாக்

அந்த வகையில் 41 வயதை கடந்தாலும் முழு உடல் தகுதியுடன் இருக்கும் தோனி இன்னும் சில வருடங்கள் விளையாடுவதற்கு தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை அப்படி நடந்தால் அது சென்னை மற்றும் தோனி ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement