இந்தமுறை 50 உலககோப்பையை ஜெயிக்கப்போறது இந்த டீம் தான். அதுல சந்தேகமே இல்ல – கங்குலி கருத்து

Sourav-Ganguly
- Advertisement -

இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை ஐசிசி-யின் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் கைப்பற்றாத வேளையில் இம்முறை இந்த கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

கடைசியாக 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி இருந்தது. அதனை தொடர்ந்து முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெற இருக்கும் 2023-ஆம் ஆண்டு உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்ற வேண்டும் என்று ரசிகர்கள் தற்போதே பிரார்த்தனைகளை துவங்கியுள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் எந்த அணி வெற்றி பெறும்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் கங்குலி எதிர்வரும் இந்த உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : இந்திய அணியே இந்த உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக நான் பார்க்கிறேன். ஏனெனில் தற்போது இந்திய அணி தங்களது முழுபலம் மற்றும் நம்பிக்கையுடன் இந்த தொடரினை எதிர்கொள்ள உள்ளது.

- Advertisement -

அதோடு இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியுள்ளது. இங்கிலாந்து மண்ணில் அவர்களை சமன் செய்துள்ளது. அதோடு எந்த நாடுகளுக்கு சென்றாலும் தங்கள் வெற்றியினை இந்திய அணி பதிவு செய்திருக்கின்றனர்.

இதையும் படிங்க : வீடியோ : யூஎஸ் ஓப்பனில் தல தரிசனம் – எம்எஸ் தோனியை அழைத்து கோஃல்ப் விளையாடிய முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

இப்படி வெளிநாடுகளிலேயே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரை எளிதில் விட்டுக்கொடுக்காது. பெரிய போட்டிகளில் இந்திய அணி சொதப்பியிருந்தாலும் நிச்சயம் இம்முறை இந்திய மண்ணில் நடக்கும் இந்த தொடர் நமக்கு கூடுதல் சாதகத்தை அளிக்கும். இந்தியா நிச்சயம் வெற்றியுடன் கோப்பையை கைப்பற்றும் என கங்குலி குறிப்பிட்டிருந்தார்.

Advertisement