வீடியோ : யூஎஸ் ஓப்பனில் தல தரிசனம் – எம்எஸ் தோனியை அழைத்து கோஃல்ப் விளையாடிய முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

Donald Trump
Advertisement

நட்சத்திர முன்னாள் வீரர் எம்எஸ் தோனி உலகிலேயே 3 விதமான வெள்ளைப்பந்து ஐசிசி உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சரித்திரம் படைத்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த மகத்தானவராக போற்றப்படுகிறார். அதே போல விக்கெட் கீப்பிங் செய்வதில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தி அழுத்தமான மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்று நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ஃபினிஷராவும் அறியப்படும் அவர் பல இளம் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார்.

அந்த வகையில் 2004 – 2019 வரை இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி ஓய்வு பெற்ற அவர் தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார். அவரது தலைமையில் இந்த வருடம் அனைத்து வீரர்களின் சிறப்பான செயல்பாடுகளால் 5வது கோப்பையை வென்ற சென்னை வெற்றிகரமான அணி என்ற மும்பையின் சாதனையை சம்பந்தப்பட்டது. மேலும் 41 வயதிலும் இளம் வீரர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் முழங்கால் வலியுடன் சிறப்பாக செயல்பட்ட அவர் தற்போது அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

பிரதமருடன் தோனி:
அங்கே தம்முடைய சொந்த ஊரான ராஞ்சியில் சாதாரண முறையில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியது, பழைய மாடல் கார் மற்றும் பைக்குகளில் ஊரை சுற்றியது, சுதந்திர தினத்தில் தமது வீட்டில் தேசியக்கொடியை ஏற்றியது போன்ற அவருடைய செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் நடைபெற்ற வரும் யூஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரை தம்முடைய நண்பர்களுடன் நேரில் சென்று தோனி பார்த்துள்ளார்.

குறிப்பாக ஒற்றையர் பிரிவில் நேற்று நடப்புச் சாம்பியன் கார்லஸ் அல்கார்ஸ் மிகவும் எளிதாக அலெக்சாண்டர் ஜுவேர்வை வீழ்த்திய போட்டியை தோனி நேரில் பார்த்தார். அப்போது தண்ணீர் இடைவெளியில் கார்லெஸ் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது அவருடைய பின்பகுதியில் தம்முடைய நண்பர்களுடன் தோனி பேசிக் கொண்டிருந்ததை கேமராமேன் போக்கஸ் செய்து படம் பிடித்தது சமூகவலைதளங்களில் வைரலானது.

- Advertisement -

இந்நிலையில் அதை பார்த்து முடித்து விட்டு தமக்கு மிகவும் பிடித்த கோல்ஃப் விளையாட்டை விளையாடுவதற்காக தோனி சென்றார். அந்த சமயத்தில் அங்கே முன்னாள் அமெரிக்க பிரதமர் டொனால்ட் ட்ரம்ப்பும் விளையாடுவதற்கு வந்துள்ளார். அப்போது தோனியை அடையாளம் கண்டு கொண்ட டொனால்ட் ட்ரம்ப் அவரையும் விளையாடுவதற்கு அழைத்து சிறிது நேரம் கோஃல்ப் விளையாடி மகிழ்ந்துள்ளார். இறுதியாக டொனால்ட் டிரம்ப், தோனி மற்றும் அவருடைய நண்பர்கள் ஆகியோர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:  ரோஹித் சர்மா, கோலி ஆகியோரால் கூட முடியாத அளவுக்கு இவரால் பேட்டிங் செய்ய முடியும் – ஹர்பஜன் நம்பிக்கை

அந்த வகையில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திரம் முன்னாள் கேப்டன் முன்னாள் எம்எஸ் தோனி அமெரிக்கன் முன்னாள் பிரதமர் ட்ரப்புடன் இணைந்து விளையாடியதை நிறைய இந்திய ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மேலும் இதிலிருந்து எம்எஸ் தோனி இந்தியாவை தாண்டி கிரிக்கெட் பிரபலமில்லாத அமெரிக்காவிலும் மிகவும் பிரபலமாக இருக்கிறார் என்பதும் தெரிய வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement