ரோஹித் சர்மா, கோலி ஆகியோரால் கூட முடியாத அளவுக்கு இவரால் பேட்டிங் செய்ய முடியும் – ஹர்பஜன் நம்பிக்கை

Harbhajan
- Advertisement -

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி துவங்கும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. எனவே இந்த தொடரில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது எந்த அணி? என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போதே அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஒரு சில வீரர்கள் விளையாட இருப்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சில வீரர்களை இந்திய அணியில் சேர்க்கவில்லை என்கிற விவாதம் அதிக அளவில் பேசப்பட்டு வரும் வேளையில் சஞ்சு சாம்சன் சூரியகுமார் யாதவ் இடத்தில் இடம் பெறுவாரா? என்ற கேள்வி ஒருபுறம் எழுந்துள்ளது.

- Advertisement -

ஆனால் இந்திய அணியின் தேர்வுக்குழுவோ சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்காமல் சூரியகுமார் யாதவுக்கு முதன்மை அணியில் இடம் கொடுத்துள்ளது. இந்நிலையில் சூரியகுமார் யாதவின் தேர்வு குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன்சிங் கூறுகையில் : சூரியகுமார் யாதவ் ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ். அவரால் சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்பட்டு அணியில் இடம் பெறாமல் போனது தேர்வுக்குழு செய்த தவறில்லை என்று நான் நினைக்கிறேன்.

ஏனெனில் சூரியகுமார் யாதவ் மிகச் சிறப்பான பேட்ஸ்மேன். அவரால் இந்திய அணியில் உள்ள மற்ற வீரர்களை விட மிகப்பெரிய ஸ்கோரை அடிக்க முடியும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சூரியகுமார் யாதவின் ஒரு நாள் போட்டிகளுக்கான புள்ளி விவரங்கள் ஏற்கக்கூடியதாக இல்லை என்று மக்கள் பேசி வந்தாலும் நிச்சயம் சூரியகுமார் யாதவ் போன்ற சிறப்பான பேட்ஸ்மேன் யாரும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

- Advertisement -

ஏனெனில் தற்போது இந்திய அணியின் பேட்டிங்கில் பலமாக பார்க்கப்படும் வீரர்களான சீனியர் வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை விட சூரியகுமார் யாதவ் சிறந்த வீரர் என்று நினைக்கிறேன். எந்த ஒரு அணிக்கு எதிராகவும் அவரால் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். எனவே என்னை பொருத்தவரை அவரை இந்திய அணியில் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் களமிறங்க வாய்ப்பு கொடுப்பேன் என்று கூறினார்.

இதையும் படிங்க : இவரையா 2023 உ.கோ ஆஸி அணியில் சேர்க்கல? பவுமா காப்பாற்றிய தெ.ஆ அணியை வீழ்த்திய லபுஸ்ஷேன் – ஆஸி அசாத்திய வெற்றி

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : காயத்திலிருந்து இந்திய அணிக்கு மீண்டு வந்துள்ள ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடுவார்களா? என்பது தெரியாது. ஆனால் ரோகித் சர்மா, ஹார்டிக் பாண்டியா ஆகியோர் இந்த உலகக் கோப்பை தொடரில் முக்கிய வீரர்களாக இருப்பார்கள் எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement