இவரையா 2023 உ.கோ ஆஸி அணியில் சேர்க்கல? பவுமா காப்பாற்றிய தெ.ஆ அணியை வீழ்த்திய லபுஸ்ஷேன் – ஆஸி அசாத்திய வெற்றி

RSa vs AUS ODi
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. அதில் முதலாவதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்னாப்பிரிக்காவை சொந்த மண்ணில் அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா 3 – 0 என்ற கணக்கில் வென்றது. அதை தொடர்ந்து இந்தியாவில் நடைபெறும் 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இவ்விரு அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 7ஆம் தேதி துவங்கியது.

ப்ளூம்போய்ன்டன் நகரில் நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்கா முடிந்தளவுக்கு போராடி 49 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சொல்லப்போனால் போட்டியில் கேப்டன் தெம்பா பவுமா மட்டும் தனி ஒருவனாக போராடினார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் குயிண்டன் டீ காக் 11, டுஷன் 8, ஐடன் மார்க்ரம் 19, ஹென்றிச் க்ளாஸென் 14, டேவிட் மில்லர் 0 என தென்னாபிரிக்காவின் முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் 100/5 என சரிந்த அந்த அணியை மறுபுறம் நங்கூரத்தை போட்டு காப்பாற்ற போராடிய பவுமா சவாலான பேட்டிங்கை வெளிப்படுத்தி கேப்டனுக்கு அடையாளமான இன்னிங்ஸ் விளையாடி சதமடித்து 114* (142) ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் நின்றார். அதிலும் தென்னாப்பிரிக்கா எடுத்த 222 ரன்களில் பாதியை தனி ஒருவனாக எடுத்து ரசிகர்களை வியக்க வைத்து பாராட்ட வைத்த அவருக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக மார்க்கோ யான்சன் 32 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 223 இந்த சுலபமான இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 0, கேப்டன் மிட்சேல் மார்ஷ் 17, ஜோஸ் இங்லிஷ் 1, அலெக்ஸ் கேரி 3, மார்கஸ் ஸ்டோனிஸ் 17 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் தென்னாபிரிக்காவின் தெறிக்க விடும் பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் சென்றனர்.

- Advertisement -

போதாக்குறைக்கு ஆரம்பத்திலேயே கேமரூன் கிரீன் காயமடைந்து 0 ரன்களில் ரிட்டையர் ஹர்ட்டாகி சென்றதால் 93/6 என மொத்தமாக சரிந்த ஆஸ்திரேலியாவுக்கு 7வது இடத்தில் சப்ஸ்டியூட் வீரராக களமிறங்கிய மார்னஸ் லபுஸ்ஷேன் நங்கூரமாக நின்று விளையாடினார். இருப்பினும் முயற்சித்த சீன் அபௌட் 9 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் 2023 உலகக்கோப்பையில் தன்னை தேர்வு செய்யாமல் கழற்றிவிட்ட தேர்வுக்குழுவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் லபுஸ்ஷேன் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

அவருக்கு அஸ்டன் அகர் எதிர்புறம் தனது பங்கிற்கு நங்கூரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 48* (69) ரன்கள் குவித்தார். அதை பயன்படுத்தி கடைசி வரை அவுட்டா காமல் எதிர்ப்புறம் தென்னாப்பிரிக்க பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய லபுஸ்ஷேன் 8 பவுண்டரியுடன் 80* (93) ரன்கள் விளாசினார். குறிப்பாக அகருடன் 8வது விக்கெட்டுக்கு 112* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் 40.2 ஓவரிலேயே ஆஸ்திரேலியாவை 225/7 ரன்கள் எடுக்க வைத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

இதையும் படிங்க: உங்ககிட்ட தரமான வேகம் இருக்கலாம் ஆனா எங்கிட்ட.. மோதி பாக்கலாம் வாங்க.. பாகிஸ்தானுக்கு உத்தப்பா, அபிஷேக் நாயர் சவால்

அதனால் இவரையா உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யவில்லை என்று ரசிகர்கள் விமர்சிக்கும் நிலையில் தென்னாப்பிரிக்கா சார்பில் ரபாடா மற்றும் ஜெரால்ட் கோட்சி தலா 2 விக்கெட்டுகள் எடுத்த போராட்டம் வீணானது.

Advertisement