உங்ககிட்ட தரமான வேகம் இருக்கலாம் ஆனா எங்கிட்ட.. மோதி பாக்கலாம் வாங்க.. பாகிஸ்தானுக்கு உத்தப்பா, அபிஷேக் நாயர் சவால்

- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றின் முடிவில் அசத்திய இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு சென்றுள்ளன. அதைத் தொடர்ந்து துவங்கிய சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்த பாகிஸ்தான் அடுத்ததாக பரம எதிரி இந்தியாவை மீண்டும் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி இலங்கையில் இருக்கும் கொழும்புவில் எதிர்கொள்கிறது. முன்னதாக இதே தொடரில் இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவை தங்களுடைய அபாரமான பந்து வீச்சால் பாகிஸ்தான் தெறிக்க விட்டது என்றே சொல்லலாம்.

குறிப்பாக ஹரிஷ் ரவூப், ஷாஹீன் அப்ரிடி ஆகியோருக்கு எதிராக ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கில் ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 66/4 என்ற மோசமான துவக்கத்தை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே திண்டாடியது. நல்லவேளையாக மிடில் ஆர்டரில் இசான் கிசான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நங்கூரமாக நின்று 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 266 ரன்கள் எடுக்க உதவி ஓரளவு மானத்தையும் காப்பாற்றினர்.

- Advertisement -

மோதி பாக்கலாம்:
அந்த நிலையில் வங்கதேசத்தை முதல் போட்டியில் வீழ்த்தியது தங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளதாக தெரிவித்த பாபர் அசாம் இந்தியாவுக்கு எதிராக 100% சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெற்றி காண்போம் என்று கூறியிருந்தார். அதனால் ஷாஹீன் போன்ற பவுலர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடித்து சமாளிப்பார்களா என்ற கவலை இந்திய ரசிகர்களிடமே காணப்படுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானிடம் தரமான பவுலிங் இருந்தால் இந்தியாவிடம் தரமான பேட்டிங் இருப்பதாக முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார். எனவே சூப்பர் 4 சுற்றில் மோதிப் பார்க்கலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அவர்களிடம் வேகம் இருந்தால் நம்மிடம் அதை சமாளிக்கக்கூடிய பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். குறிப்பாக டி20 உலக கோப்பையில் விராட் கோலி போன்றவர் பேட்டிங் செய்த விதத்தை நாம் பார்த்தோம்”

- Advertisement -

“அதனால் நம்மிடம் சவாலை சமாளிக்கும் திறமை மிகுந்த வீரர்கள் இருக்கின்றனர். குறிப்பாக வேகத்தை கொண்டிருக்கும் பவுலர்களை மிஞ்சி வருவதற்கு நம்மிடமும் வீரர்கள் இருக்கின்றனர். அதனால் இங்கே பாகிஸ்தான் கை ஓங்கியிருப்பதாக எனக்கு தோன்றவில்லை. எனவே சமநிலை கொண்ட இந்த 2 அணிகளில் இந்தியா அழுத்தமான சமயங்களை கடந்து வெற்றி காணும் திறமை கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் ராபின் உத்தப்பா பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: மஹாபாரதம் மாதிரி பில்டப் பண்ற இந்தியா அந்த நாள் மண்ணை கவ்வுறது இப்போவே என் கண்ணுல தெரியுது – சோயப் அக்தர் பேட்டி

“அவர்களிடம் வேகம் மற்றும் மிகவும் நுணுக்கங்கள் நிறைந்த சாகின் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் போன்ற பவுலர்கள் இருக்கின்றனர். இருப்பினும் அதை சமாளிப்பதற்கு நம்மிடமும் தரமான பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர் என்பது உண்மையாகும்” என்று கூறினார். அவர்கள் கூறுவது போல அப்போட்டியில் 66/4 என சரிந்த இந்தியா 150 ரன்கள் கூட தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதே பவுலர்களை சிறந்த பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொண்ட காரணத்தாலேயே இறுதியில் வெற்றிக்கு போராடும் அளவுக்கு இந்தியா 266 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement