மஹாபாரதம் மாதிரி பில்டப் பண்ற இந்தியா அந்த நாள் மண்ணை கவ்வுறது இப்போவே என் கண்ணுல தெரியுது – சோயப் அக்தர் பேட்டி

Shoaib Akhtar 3
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலக கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்கி நவம்பர் 19 வரை பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக போற்றப்படும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்புக்கு காணப்படுகிறது. இருப்பினும் இடது கை பவுலர்களுக்கு எதிராக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்புவது, ராகுல் போன்ற காயமடைந்த வீரர்களால் மிடில் ஆர்டர் பலவீனமாக இருப்பது, கேட்ச்களை கோட்டை விடுவது போன்ற பல சொதப்பல்களை சமீபத்திய போட்டிகளில் அரங்கேற்றிய இந்தியா வெல்லுமா என்பது ரசிகர்களிடம் சந்தேகமாகவே இருக்கிறது.

அது போக உலகக் கோப்பை துவங்க இன்னும் 2 மாதம் கூட இல்லாத நிலைமையில் மாற்றங்கள் என்ற பெயரில் சோதனைகளை செய்து வரும் இந்தியா நிலையான 11 பேர் அணியை உருவாக்குவதில் தடுமாறி வருகிறது. அதனால் கேப்டன்கள் மற்றும் வீரர்களை அடிக்கடி மாற்றுவது போன்ற குளறுபடிகளை செய்து தங்களை தங்களை அழித்துக் கொண்டிருக்கும் இந்தியாவை நன்கு செட்டிலாகியுள்ள பாகிஸ்தான் இம்முறை தோற்கடிக்கும் என்று பெரிய முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

மஹாபாரதம் மாதிரி:
இந்நிலையில் நிச்சயம் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை மகாபாரதம் போல் இந்திய ஊடகங்கள் சித்தரிப்பதால் இந்திய அணி மீது உச்சகட்ட அழுத்தம் இருப்பதாக சோயப் அக்தர் கூறியுள்ளார். எனவே அதை பயன்படுத்தி அகமதாபாத் மைதானத்தில் வென்று 2011 உலகக்கோப்பை இந்தியாவை கண்டிப்பாக பாகிஸ்தான் பழி தீர்க்கும் என்ன தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“மகாபாரதம் போல இந்திய ஊடகங்கள் பாகிஸ்தான் மீது நிறைய அழுத்தத்தை உண்டாக்குகின்றன. இது கண்ணுக்கு தெரியாத அழுத்தமாகும். ஏனெனில் அவர்கள் பாகிஸ்தானை எளிதாக இந்தியா தோற்கடிக்கும் என்று சொல்கின்றனர். ஆனால் உண்மையாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தான் மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாகப் போகிறது. ஏனெனில் அவர்கள் இந்தியாவை இப்போதே வெற்றியாளராக கொண்டாடுகின்றனர்”

- Advertisement -

“அதன் காரணமாக பாகிஸ்தான் மீது எந்த அழுத்தமுமில்லை. ஏனெனில் ஊடகங்கள் பாகிஸ்தான் தோற்பதை எதிர்பார்க்கின்றன. எனவே பாகிஸ்தான் பயமின்றி விளையாடினால் இந்த உலகக் கோப்பையை வெல்லலாம். குறிப்பாக இந்தியாவில் 50,000 பேருக்கும் குறைவாக உட்காரும் மைதானங்களே இல்லை. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடுவதை 2 பில்லியன் மக்கள் பார்ப்பார்கள்”

இதையும் படிங்க: உலககோப்பை அணியில் இடம்கிடைக்காததை அடுத்து யுஸ்வேந்திர சாஹல் எடுத்துள்ள அதிரடி முடிவு – விவரம் இதோ

“எனவே பெரிய மாற்றங்களை செய்யாமல் முழு தன்னம்பிக்கைடன் இத்தொடர் முழுவதும் விளையாடினால் பாகிஸ்தான் அணியால் சாதிக்க முடியும். குறிப்பாக 2023 உலக கோப்பையை அகமதாபாத் மைதானத்தில் வென்று இந்தியாவை 2011 உலக கோப்பை தோல்விக்கு பாகிஸ்தான் பழி தீர்க்கும். அதை இப்போதே எங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது” என்று கூறினார். எனவே அதற்கு இந்தியா பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement